பிச்சை எடுப்பதற்காக கடத்தப்பட்ட 4 சென்னை மாணவர்கள் ம.பியில் மீட்பு
சென்னை:
பிச்சை எடுப்பதற்காக சென்னையிலிருந்து கடத்தப்பட்ட 4 மாணவர்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ளரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
போபால் ரயில் நிலையத்தில் சமீபத்தில் சில சிறுவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். அவ்வாறு பிச்சைஎடுத்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்களைப் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போதுதான் அந்தச் சிறுவர்கள் அனைவரும் பிச்சை எடுப்பதற்காகவே கடத்தி வரப்பட்டிருந்தவர்கள் என்றஅதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது. இந்தச் சிறுவர்கள் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்தச் சிறுவர்களில் நான்கு பேர் சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் என்ற விவரம் தெரியவந்தது. சுரேஷ் (13), தனசேகர் (14), ஸ்ரீதர் (14) மற்றும் விஜய் (13) ஆகிய இந்த நான்கு மாணவர்களும்பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சுரேஷும், தனசேகரும் கடந்த 2000ம் ஆண்டிலேயே காணாமல் போய்விட்டனர். ஸ்ரீதரும், விஜய்யும் கடந்தஆகஸ்ட் மாதம்தான் காணாமல் போயினர். இதுகுறித்து போலீசாரிடம் அவர்களுடைய பெற்றோர்கள் புகார்செய்திருந்தனர். போலீசாரும் பெற்றோரும் தேடித் தேடி சலித்துப் போய் விட்டனர்.
இந்நிலையில்தான் போபால் ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில்வெளியிடப்பட்டன. அவர்களில் தங்கள் பிள்ளைகளும் இருப்பதைக் கண்ட நான்கு சென்னை மாணவர்களின்பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிறுவர்கள் அனைவரும் தற்போது போபால் ரயில்வே போலீசாரிடம் பத்திரமாக உள்ளனர். அவர்களை மீட்டுக்கொண்டு வர சென்னை-சேத்துப்பட்டு போலீசார் போபால் விரைந்துள்ளனர்.
கடத்தியவர்கள் யார்?
இந்நிலையில் சேத்துப்பட்டு மற்றும் சூளைமேட்டைச் சேர்ந்த சில கும்பல்கள்தான் இந்த நான்கு மாணவர்களையும்கடத்தியதாகக் கருதப்படுகிறது.
மேலும் இப்பகுதிகளில் உள்ள போதை மருந்துக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இம்மாணவர்களைக்கடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மயக்க மருந்தைக் கொடுத்தே இம்மாணவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இருந்தாலும் அந்த நான்கு மாணவர்களிடமும் விசாரணை நடத்திய பின்னரே உண்மை தெரிய வரும்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications