உயர் நீதிமன்ற வக்கீலைத் தாக்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
சென்னை:
உயர் நீதிமன்ற வக்கீலைத் தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக இருப்பவர் உமாபதி. கடந்த டிசம்பர் 31ம் தேதி பீர்க்கங்கரணை காமராஜர்நகர் பகுதியில் தனது நண்பர்களோடு தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ரவுண்ட்ஸ் வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், அவர்களை அங்கிருந்து போகுமாறுகூறியுள்ளார். இதைத் தொடர்ந்து வக்கீல் உமாபதிக்கும், ஜெயராமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து உமாபதியை ஜெயராமன் அடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவரை போலீஸ் நிலையத்திற்கும்அழைத்துச் சென்று சிறிது நேரம் வைத்திருந்து அனுப்பியதாகத் தெரிகிறது.
விடுவிக்கப்பட்ட உமாபதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர்நடந்தது குறித்து வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரனிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டியிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார் வழக்கறிஞர் பிரபாகரன்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்.பியான பொன். மாணிக்கவேலிடம் இதுதொடர்பாகப் புகார் கொடுத்தபோதுஅவர் அதை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. அவர் "தாதா"போல செயல்படுகிறார் என்றும் புகார் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரை வழக்காக ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, முதல் பெஞ்ச்சுக்கு அனுப்பினார்.நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்குவிசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல் சுப்ரமணியம், வக்கீல் தாக்கப்பட்டது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்ஜெயராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து முறைப்படி ஜெயராமன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications