For Daily Alerts
Just In
சாத்தான்குளத்தில் பா.ஜ.க. போட்டி
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து வரும் 18ம் தேதிநடைபெறவுள்ள பா.ஜ.க. தேர்தல் குழு கூட்டத்தின்போது முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் அகில இந்தியசெயலாளர் இல. கணேசன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆராய 3 பேர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுதன் அறிக்கையை தற்போது கொடுத்துள்ளது.
சாத்தான்குளத்தில் பா.ஜ.க. போட்டியிடலாம் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் தேர்தல் குழுக் கூட்டத்தில், வேட்பாளர் குறித்துமுடிவு செய்யப்படும் என்றார் கணேசன்.
-->
Comments
Story first published: Saturday, January 11, 2003, 5:30 [IST]