சசிகலா அக்காள் மகனின் பெயரைக் கூறி மோசடி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரனின் பெயரைக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
சென்னையில் ரியல் எஸ்டேட் ஏஜென்டாக இருப்பவர் நெடுமாறன். புத்தாண்டு தினத்தன்று, நெடுமாறனும் அவரது நண்பர்கள் சிலரும் ஒருகல் குவாரி உமையாளரை அணுகியுள்ளனர்.
தான் பாஸ்கரனின் தனி செயலாளர் என்றும், தனது நண்பர் அய்யாத்துரையிடம் வாங்கிய கடனை விரைவில் அடைக்காவிட்டால் நடப்பதேவேறு என்றும் அவரிடம் மிரட்டியுள்ளார் நெடுமாறன்.
நெடுமாறன் குறித்து சந்தேகம் அடைந்த குவாரி உமையாளர் குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார்போயஸ் தோட்டத்தில் விசாரித்தனர். அப்போது நெடுமாறன் என்று யாரும் பாஸ்கரனுக்கு செயலாளராக இல்லை என்று தெரிந்தது.
இதையடுத்து நெடுமாறனை போலீசார் அவரது வீட்டில் சென்று கைது செய்து இழுத்துச் சென்றனர். அய்யாத்துரையும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த இருவர் மீதும் கடத்தல் முயற்சி, மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications