தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சாலைப் பணியாளர்கள் முடிவு
மதுரை:
வேலையிலிருந்து நீக்கப்பட்ட சாலைப் பணியாளர்களை மீண்டும் சேர்க்கக் கோரி பிப்ரவரி 22ம் தேதி முதல்தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக சாலைப் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு கடந்த ஆண்டு சுமார் 10,000 சாலைப் பணியாளர்களை வேலையிலிருந்து விலக்கி வீட்டுக்குஅனுப்பியது.
இதை எதிர்த்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை தங்கள் குடும்பத்தினருடன் போராட்டம்நடத்தியும் கூட அவர்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது.
நீக்கப்பட்ட சாலைப் பணியாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி பிப்ரவரி 22ம் தேதி முதல் தொடர்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை சாத்தான்குளத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் பிப்ரவரி 26ம் தேதி தேர்தல் நடக்கவிருப்பதால் அப்போதாவது எங்கள் மீது தமிழக முதல்வர்ஜெயலலிதாவின் பார்வை படும் என்று நம்புகிறோம் என்று சாலைப் பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர்கூறினார்.
சாத்தான்குளத்தைத் தொடர்ந்து வேறு பல ஊர்களிலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவும் சாலைப்பணியாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications