இலவச உணவு: டோக்கன் வாங்கக் கூட முன் வராத விவசாயிகள்
சென்னை:
தமிழகத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு நாளை முதல் இலவச மதிய உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ள போதிலும், அதற்கான டோக்கன்களை கூட பெரும்பாலான விவசாயிகள் வாங்க முன் வரவில்லை.
கையில் சட்டியை வைத்துக் கொண்டு, குடும்பத்துடன் வரிசையில் வந்து நின்று இலவசமாய் உணவு வாங்க இந்தஉழைக்கும் வர்க்கம் தயாராக இல்லை.
தனது இலவச உணவுத் திட்டத்துக்கு விவசாயிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால் கலங்கிப் போய்விட்டதமிழக அரசு உடனே ஏதாவது செய்து விவசாயிகள் கையில் டோக்கன்களைத் திணிக்குமாறு மாவட்டகலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர்கள் ஆங்காங்கே விவசாயிகள் சங்கத்தினருடன் அவசர ஆலோசனைகளில்ஈடுபட்டுள்ளனர்.
எங்களுக்கு ஏதாவது வேலை தரட்டும், இல்லாவிட்டால் வங்கி மூலம் கடன் உதவி தரட்டும், அதுவும்இல்லாவிட்டால் உணவு தானியத்தைத் தரட்டும். நாங்கள் வாங்குகிறோம். அதைவிட்டுவிட்டு இலவசமாய் சோறுபோடுவதாய்சொல்லி எங்களைக் கூப்பிட்டு மானத்தை வாங்குவதை ஏற்க மாட்டோம் என பல விவசாயசங்கங்களும் அறிவித்துவிட்டன.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில நீர் திறந்துவிட மறுத்ததைத் தொடர்ந்து குறுவை சாகுபடி செய்யமுடியாமல் போனது. தொடர்ந்து இப்போது போதிய நீர் விடாமல் மெத்தனமாக இருப்பதால் தமிழகவிவசாயிகளின் சம்பா பயிர்களும் கருகத் தொடங்கின.
இதனால் குடும்பங்கள் பட்டினியால் தவிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல் மனம் உடைந்த இரு விவசாயிகள்தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் ஏழை விவசாயிகளுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை தமிழகஅரசு அறிவித்தது.
இந்தத் திட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளுமே பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. உரியநிவாரணம் அல்லது அரிசி, பருப்பு ஆகியவற்றை அளித்திருக்கலாம் என்றும் அவை கூறின. இந்த இலவச உணவுத்திட்டம் மூலம் விவசாயிகளின் தன்மானத்தோடு அரசு விளையாடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதையும் மீறி இத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால், இலவசமாய் சோறு உண்பதில்விவசாயிகளுக்கே உடன்பாடு இல்லை. நாட்டுக்கே உணவு உற்பத்தி செய்து தரும் தங்களுடைய நிலைமைபாத்திரம் ஏந்தும்படி ஆகிவிட்டதே என்றுதான் பெரும்பாலான விவசாயிகள் குமுற ஆரம்பித்துள்ளனர்.
இலவச மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 26,074 சத்துணவு மையங்கள்தயார்படுத்தப்பட்டுள்ளன. இலவச உணவுக்கான டோக்கன்களை ஊராட்சிமன்ற அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால், நாளை இத் திட்டம் தொடங்கவுள்ள நிலையில் இன்று வரை பெரும்பாலான விவசாயிகள் டோக்கன்களைவாங்கவில்லை. மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் கெஞ்சாத குறையாக டோக்கன்களை வாங்குமாறுவிவசாயிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த இலவச உணவுத் திட்டத்திற்கான செலவைச் சமாளிப்பதற்காகவும், ஏழை விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவதற்காகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வாஜ்பாயிடம் ரூ.400 கோடி உதவித்தொகையும், 2 லட்சம் டன் அரிசியும் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தமிழகத்துக்கு 2 லட்சம் அரிசி வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.டெல்லியில் நடந்த பேரணியில் பேசிய வாஜ்பாய் இதனைத் தெரிவித்தார். ஆனால், தமிழகம் கோரிய ரூ. 400 கோடி நஷ்டஈடுகுறித்து அவர் வாய் திறக்கவில்லை.
மொத்தத்தில் காவிரியில் நீர் வராததால் தமிழகத்தின் நெல் விளையும் பூமிகள் காய்ந்து போய் பொட்டல் காடாகிவிட்டன. அதில்பயிரிடப்பட்ட தங்களது சம்பா நெல் பயிர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கருகி கொண்டிருப்பதை கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டுள்ளனர் விவசாயிகள். ஆனாலும் ஓசியில் உணவு சாப்பிட இந்த உழைப்பாளிகளுக்கு அவர்களது தன்மானம் இடம்தரவில்லை.
பல விவசாயிகளின் வீடுகளில் பொங்கல் வைக்கக் கூட அரிசி கிடையாது என்பது தான் உண்மை நிலை.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications