For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசின் புதிய நிர்வாக நகரம்: மாமல்லபுரத்தில் அமைகிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மாமல்லபுரம் அருகே 5,000 ஏக்கர் பரப்பில் தமிழக அரசின் நிர்வாக நகரம் அமையப் போகிறது.

இந்த நகரத்தில் சட்டசபை, முதல்வர் அலுவகம், தலைமைச் செயலகம், அமைச்சர், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளின் வீடுகள்அமையப் போகின்றன.

இந்த நகரை மலேசியா அமைக்கப் போகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் மலேசிய அமைச்சர் டத்தோசாமிவேலுவும் கையெழுத்திட்டனர்.

இப்போது சட்டசபை, தலைமைச் செயலகம் ஆகியவை அமைந்துள்ள வளாகம் ராணுவத்துக்குச் சொந்தமானது. புனித ஜார்ஜ்கோட்டை என்று அழைக்கப்படும் இந்த வளாகத்தில் ராணுவத்துக்கே இடம் போதவில்லை.

10 மாடிகள் கொண்ட நாமக்கல் மாளிகை அரசு அலுவலகமும் இருப்பதால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களும், தினமும்ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்ல பெரும் சிரமமாக உள்ளது.

மேலும் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கட்டடம் மிகப் பழையது. அவ்வப்போது பராமரிப்புகள் நடந்தாலும் அதைச் சீராகவைத்திருப்பதில் பெரும் சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

இதையடுத்து தலைமைச் செயலகத்தை மகாபலிபுரம் அருகே மாற்ற முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார். இந்த நகரை அதிநவீனமாக அமைப்பது தொடர்பாக மலேசிய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இப்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன்படி மாமல்லபுரம் அருதே உள்ள திருவிடந்தை, தையூர் கிராமங்கள், அதைச் சுற்றியுள்ள அரசு நிலம், தனியார் நிலம்ஆகியவை ஒன்று சேர்க்கப்பட்டு 5,000 ஏக்கர் நிலம் திரட்டப்படும். இங்குள்ளவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட்டுஅவர்களது நிலங்கள் கையகப்படுத்தப்படும்.

இந்த நகருக்காக தனி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், பஸ் ஸ்டான்ட், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், பூங்காக்கள்,தியேட்டர்கள், வணிக வளாகங்கள் ஆகியவையும் அமைக்கப்படும்.

இதன் காரணமாக சென்னையில் பெருமளவு நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நகரை அமைக்க எத்தனைகோடிகள் செலவாகும் என்பதை அரசு இன்னும் தெரிவிக்கவில்லை.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X