For Daily Alerts
Just In
மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: அதிமுகவினருக்கு ஜெ. உத்தரவு
சென்னை:
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில்வரும் 25ம் தேதி அதிமுக மாணவர் அணி சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்த முதல்வரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து, தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளைநினைவு கூரும் வகையில் இந்தப் பொதுக்கூட்டங்கள் அமைந்திட வேண்டும்.
அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் மாணவர் அணி, மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் ஆகியோர் இணைந்து பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும்என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-->


