டாக்டர் டிகிரி சர்ச்சை.. கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் விளக்கம்
கோவை: BA.BL படிப்பு என அபிடவிட்டில் குறிப்பிட்டு டாக்டர் என பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டு வருவது குறித்து தற்போது நிலவி வரும் கருத்துக்கள் தொடர்பான கேள்விக்கு கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் விளக்கம் அளித்துள்ளார். தான் டாக்டரேட் பட்டம் ஜோதிடத்தில் தான் வாங்கி உள்ளதாக கூறினார்.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் துடியலூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள மருத்துவர்கள் செவிலியர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் துடியலூர் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள காய்கறி வியாபாரிகள் இடமும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி சந்தோஷ், " இங்கு பணியாட்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளனர் அதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்றும் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வருவதாக தெரிவித்துள்ளனர். அதற்கான மருந்துகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர் அவையும் கூடிய விரைவில் சரி செய்யப்படும் அதே சமயம் நாய் கடிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் .
சந்தை நடைபெறும் இடத்திலும் சில பிரச்சனைகள் உள்ளது. லீசுக்கு எடுப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் இது குறித்து ஏற்கனவே அவர்கள் மனு அளித்துள்ளார்கள். அது சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக அந்த பகுதியில் கழிவுகள் பிரச்சனை அதிக அளவு உள்ளது அவை கூடிய விரைவில் சரி செய்து தரப்படும் என்றார்.
BA.BL படிப்பு என அபிடவிட்டில் குறிப்பிட்டு டாக்டர் என பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டு வருவது குறித்து தற்போது நிலவி வரும் கருத்துக்கள் தொடர்பான கேள்விக்கு - நான் டாக்டரேட் பட்டம் ஜோதிடத்தில் தான் வாங்கி உள்ளேன். என்னுடைய Profession சட்டப்படிப்பு தான் நான் அடிப்படையில் வழக்கறிஞர். ஜோதிடத்தில் ஆர்வம் என்பதால் அதில் டாக்டரேட் முடித்துள்ளேன்.
மருத்துவம் படித்த டாக்டராக இருந்தாலும் சரி டாக்டரேட் படுத்திருந்தாலும் சரி அதனை டாக்டர் என்றுதான் பொதுவாக குறிப்பிடுவார்கள் அப்படி இருக்கும் பொழுது டாக்டர் என்பது எனக்கு புனைபெயராக மாறிவிட்டது, என்னுடைய வலைதள வீடியோக்கள் அனைத்தும் உடல் நலம் சார்ந்து அதிகமாக இருக்கும். அதனால் டாக்டர் படித்துக் கொண்டு இவ்வாறு சர்ச்சையாக பேசுகிறேன் என்று புரிந்து கொண்டு விட்டார்கள் . நான் அடிப்படையில் சட்டப்படிப்பு படித்தவர் ஜோதிடத்தில் டாக்டரேட் முடித்துள்ளேன்" இவ்வாறு கனிமொழி சந்தோஷ் விளக்கம் அளித்தார்.
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட வெள்ளகிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சிகிச்சைக்காக வந்த பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்து, மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக ஆய்வு… pic.twitter.com/9CLrV4guq8
— Kanimozhi Santhosh (@Kanimozhi_tvk) May 19, 2026
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications