சுங்கத்துறை அதிகாரி போல நடித்து ரூ.2 லட்சம் மோசடி
விருதுநகர்:
சுங்கத்துறை அதிகாரி போல நடித்து போலியான சுங்கத்துறை முத்திரைத் தாள்களைப் பயன்படுத்தி ரூ.2 லட்சம்வரை மோசடி செய்த நபரை ஒரிஜினல் சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
விருதுநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கிளையில், சுங்கத்துறை முத்திரைத் தாள்களை போல போலியாகப்பயன்படுத்தி பண மோசடி நடந்து வருவதாகப் புகார்கள் வந்தன.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் குழு சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்று கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டது. அப்போது ஒரு நபர் குறித்து அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த நபரை கையும் களவுமாகப் பிடிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். சம்பந்தப்பட்டநபர் வங்கிக்கு வந்தபோது, அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் இருந்தவை போலியான முத்திரைத் தாள்கள் தெரிய வந்தது. சுங்கத்துறை அதிகாரி போலநடித்து இதுவரை ரூ.2லட்சம் அளவுக்கு பண மோசடியில் அவர் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது.
அவரது பெயர் பரத்வாஜ் என்றும் அவர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து அவரை சுங்க அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவருடன் வேறு யாருக்கும் இந்தமோசடியில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
-->


