சம்பா பயிர் கருகிய அதிர்ச்சியில் பெண் சுருண்டு விழுந்து சாவு
திருவாரூர்:
திருவாரூர் அருகே தன் வயலில் விதைத்த பயிர்களைப் பார்க்கச் சென்ற ஒரு பெண் அவை கருகிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நேற்று முன் காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததாலும், கர்நாடக அரசு தமிழகத்திற்குத்திறந்துவிட வேண்டிய காவிரி நீரைத் திறந்து விடாததாலும் சம்பா பயிர்கள் அனைத்தும் சிறிது சிறிதாகக் கருகஆரம்பித்தன.
இதைக் கண்டு கடும் வேதனையடைந்து இந்த மாதத் துவக்கத்தில் வீரையன் மற்றும் சண்முகம் ஆகிய இரண்டுவிவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவங்கள் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளிடையேபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள கீழவாழக்கரையைச் சேர்ந்த பத்மாவதி (45)என்ற பெண்ணும் தன் வயலில் சம்பா பயிரிட்டிருந்தார்.
தன்னிடமிருந்த பணத்தை முழுவதும் சம்பா பயிரிடுவதற்கே செலவு செய்துவிட்ட பத்மாவதி, நேற்று முன்தினம்தன் வயலுக்குச் சென்றிருந்தார்.
அப்போது வயலில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பல இடங்களில் கருகிப் போய்க் கிடந்ததையும், அந்த இடங்கள்வறண்டு போய்க் கிடந்ததையும் பார்த்து அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த அதிர்ச்சியில் பத்மாவதி மயங்கி, அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
ஏற்கனவே இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு பெண் விவசாயியும்பலியாகி விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கும் திருவாரூர் தொகுதிஎம்.எல்.ஏவான அசோகன் தந்தி அனுப்பியுள்ளார். "இதுபோன்ற சாவுகள் தொடர்வதைத் தவிர்க்க வேண்டுமானால்தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அந்தத் தந்தியில்அவர் குறிப்பிட்டுள்ளார்.
-->


