தொடர் தோல்வி எதிரொலி: நிருபர்களை தவிர்த்த கங்குலி
மும்பை:
நியூஸிலாந்தில் அடி மேல் அடி வாங்கி இன்று நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பத்திரிக்கைநிருபர்களிடம் எதுவுமே பேசாமல் தப்பித்து ஓடினர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நியூஸிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணியினர் சுற்றுப் பயணம்மேற்கொண்டிருந்தனர்.
நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் மோதினர்.ஆனால் இரண்டு (5வது, 6வது) ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணியினர் வெற்றி பெற்றனர். மற்றஅனைத்திலும் தோல்வியே.
இதனால் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும், 5-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் நியூஸிலாந்துஅணி கைப்பற்றியது.
இந்நிலையில் நியூஸிலாந்து பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய அணி வீரர்கள் இன்று காலை மும்பைதிரும்பினர்.
அவர்களைச் சந்திப்பதற்காக மும்பை விமான நிலையத்தில் பத்திரிக்கை நிருபர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நிருபர்களைப் பார்த்தும் பார்க்காதது போல அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சென்றுவிட்டனர்.
இந்திய அணியின் கேப்டன் செளரவ் கங்குலி தன்னுடைய கொல்கத்தா விமானத்தைப் பிடிப்பதற்காக ஓடினார்.இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரோ விமானத்தில் இறங்கியசுவடே தெரியாமல் காரில் ஏறி வீட்டுக்குப் பறந்து விட்டார்.
ஒரு நிருபர் கங்குலியின் செல்போன் மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பேசிய கங்குலி, "நான்நிருபர்களிடம் ஏற்கனவே போதுமான அளவு பேசி விட்டேன். நியூஸிலாந்து தொடர் முடிந்து விட்டது.மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை" என்று கூறிவிட்டு செல்போன் தொடர்பைத் துண்டித்து விட்டார்.
கொல்கத்தா விமான நிலையத்திலும் அவர் நிருபர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார். காலை 10 மணிக்கு கொல்கத்தாவிமான நிலையத்தை அவர் அடைந்தார். அடுத்த சில வினாடிகளிலேயே அவருடைய குடும்பத்தினரும்,பாதுகாப்பு அதிகாரிகளும் கங்குலியை சூழ்ந்து நின்று கொண்டு அவரைக் காரில் ஏற்றினர்.
கார் கிளம்புவதற்கு முன், "தயவு செய்து இப்போது என்னை எதுவும் கேட்காதீர்கள். நீண்ட பயணம் காரணமாகநான் மிகவும் களைப்பாக உள்ளேன்" என்று மட்டும் நிருபர்களிடம் கூறினார். உடனே கார் கிளம்பி விட்டது.
எப்போதுமே கொல்கத்தா விமான நிலையத்துக்கு வரும்போது தன்னுடைய ரசிகர்களுக்கு கங்குலி ஆட்டோகிராப்போடுவது வழக்கம். ஆனால் இம்முறை ரசிகர்களையும் கங்குலி ஏமாற்றி விட்டார்.
அதேபோலவே, மும்பை விமான நிலையத்தில் ராகுல் டிராவிட், ஜவஹல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே ஆகியவீரர்களும் தங்களுடைய பெங்களூர் விமானத்தை நோக்கி ஓடினார்களே தவிர, நிருபர்களைக் கண்டு கொள்ளவேஇல்லை.
மும்பையில் வந்திறங்கிய அஜித் அகர்கர், ஜாஹீர் கான் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரும் வேக வேகமாகஇடத்தைக் காலி செய்தனர். ஆனாலும் சஞ்சய் பங்கர் மட்டும் பொறுமையாக நிருபர்களிடம் பேசினார்.
"நாங்கள் அனைவருமே மிகவும் "பாசிட்டிவ்"வாக நினைத்துக் கொண்டுதான் நியூஸிலாந்து பயணத்தைத்தொடங்கினோம். ஆனால் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. அடுத்து உலகக் கோப்பை போட்டிகள்வந்துவிட்டன. அதில் இனி தீவிர கவனம் செலுத்துவோம்" என்றார் பங்கர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications