பாஷா மீதான வெடிகுண்டு வழக்கில் 24ம் தேதி தீர்ப்பு
சென்னை:
சென்னையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க சதித் திட்டம் தீட்டியதாக அல் உம்மா தலைவர்பாஷா உள்ளிட்ட 24 பேர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு வரும் 24ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம், வேப்பேரி, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் அல்உம்மா அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக நடந்த விசாரணையில் கோடம்பாக்கம் பாலம் உள்பட சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில்வெடிகுண்டுகளை வெடிக்கச் சதித் திட்டம் தீட்டியது குறித்த விவரங்கள் தெரிய வந்தன.
இதைத் தொடர்ந்து அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 24 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகளைத்தொடர்ந்தனர். இந்த வழக்குகள் சென்னை-பூந்தமல்லியில் உள்ள தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன.
கடந்த 5 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில் கடந்த 6ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.ஆனால் அன்று தீர்ப்பு வழங்கப்படாமல் 20ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து கோவை சிறையில் இருந்த பாஷா உள்ளிட்ட 15 பேரும், வேலூர் சிறையில் இருந்த சங்கீதா என்றஆயிஷா ஆகியோர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவர்களும் சென்னை மத்திய சிறையில் இருந்த 8பேரும் இன்று காலை தடா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சில விளக்கங்களைக் கேட்ட பின்னர் வரும் 24ம் தேதிக்கு இறுதித் தீர்ப்புவழங்கப்படும் என்று நீதிபதி ராஜேந்திரன் அறிவித்தார்.
வழக்கின் சில ஆவணங்களைப் படித்துப் பார்க்க சிறிது நாட்கள் தேவை என்பதால் தீர்ப்பை ஒத்தி வைப்பதாகநீதிபதி அறிவித்தார்.
அல்-உம்மா பாஷா உள்ளிட்ட 24 பேரும் இன்று பூந்தமல்லிக்குக் கொண்டு வரப்பட்டதால் நீதிமன்றத்துக்கு மிகபலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. இந்தக் கைதிகள் கொண்டு வரப்பட்ட வேன்களுக்குமுன்பாகவும் பின்னும் ஏராளமான துப்பாக்கி ஏந்திய போலீசார் 10 ஜீப்களில் சென்றனர்.
இது தவிர பாஷா உள்ளிட்ட பலர் மீதும் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதுநினைவுகூறத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications