தமிழகம்: ஒரு ரவுண்ட்-அப்

Subscribe to Oneindia Tamil

கணவரை ஆள் வைத்துக் கொன்ற மனைவி விடுதலை

கணவரை ஆள்வைத்து அடித்துக்கொன்றதற்காக திருப்பூர் கோர்ட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டமனைவியை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி ரத்தினமணி. கள்ளத் தொடர்பு காரணமாக கணவர் துரைசாமி,தனது மனைவியைக் கண்டித்துள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த ரத்தினமணி, இளங்கம்பன் மற்றும் இன்னொருவருடன் சேர்ந்து கணவர்துரைசாமியை அடித்துக் கொன்றதாக போலீஸார் 3 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 3 பேருக்கும் திருப்பூர் விரைவு நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதைஎதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேரும் அப்பீல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினகர் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், 3 பேர்மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் சந்தர்ப்ப சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 3 பேரையும்விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

மஞ்சள் மண்டியில் தீ: ரூ. கோடி நஷ்டம்

ஈரோட்டில் மஞ்சள் மண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள மஞ்சள் எரிந்து சாம்பலானது.

ஈரோட்டில் சத்தியமங்கலம் சாலையில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான மஞ்சள் மண்டி உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் அங்கு திடீரென தீ விபத்துஏற்பட்டது.

காயந்த மஞ்சள் டன் கணக்கில் குவிக்கப்பட்டிருந்தால் தீ மள மளவென பரவியது. தகவல் அறிந்த தீயணைப்புப் படையிர் விரைந்து வந்தனர். ஆனால்,சுமார் 5 மணி நேரம் போராடிய பின்னர் தான் அவர்களால் தீயை அணைக்க முடிந்தது.

மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் மண்டியில் இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள மஞ்சளும் எரிந்துசாம்பலாகிவிட்டதாக அதன் உரிமையாளர் கணேசன் தெரிவித்தார்.

மஞ்சள் எரிந்ததால் அப் பகுதியில் ஒரே மஞ்சள் நெடி பரவியது. பலருக்கும் கண் எரிச்சலும், தும்மலும் ஏற்பட்டது.

ஜெ. தலைமையில் நிதிக்குழுக் கூட்டம்:

இன்னும் மூன்று நாட்களில் சட்டமன்றம் கூட இருப்பதால் நிதிக் குழுவினருடன் முதல்வர் ஜெயலலிதா முக்கிய திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனைநடத்தினார்.

கோட்டையில் நடந்த இக் கூட்டத்தில் நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சட்டமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இது என்பதால் ஆளுநரின் உரையுடன் தொடர் துவங்கும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+