பஸ் ஊழியர்களுக்கு அடுத்த அடி: "ஓவர் டைம்" ஊதியம் குறைப்பு
சென்னை:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்குவழங்கப்படும் "ஓவர் டைம்" ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி அவற்றைத் தனியார் முதலாளிகளிடம்விற்றுவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மொத்தத்தில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ந்து செக்வைக்கப்பட்டு வருகிறது.
இப்போது மீண்டும் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பக்கம் திரும்பியுள்ளது அரசு. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் பல்வேறு புதிய சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக "ஓவர் டைம்" பார்த்தால் கொடுக்கப்படும் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திற்கேற்றவாறு "ஓவர் டைம்" படி நிர்ணயிக்கப்படுகிறது.
அதை மாற்றி 3 மணி நேரத்திற்கு 80 ரூபாய் என்று புதிய "ஓவர் டைம்" படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊழியர்சங்கங்களுடன் நடந்த தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆண்டுக்கு ரூ.35 லட்சம் நஷ்டத்துடன் இயங்கி வருவதாகக்கூறப்படுகிறது. இந்த நிலையில் பொருளாதார நிலையை மேம்படுத்த "ஓவர் டைம்" படி குறைப்பை மேற்கொள்வதுஅத்தியாவசியமாகி விட்டதாக அரசு கூறியுள்ளது.
போராடிப் பார்த்தாலும் அரசு எதையும் தரப் போவதில்லை என்பதை ஊழியர்களும் உணர்ந்துள்ளதால் இந்தஊதியக் குறைப்பை ஒப்புக் கொண்டுவிட்டனர்.
டிரைவர்கள் குறைப்பு:
தற்போது நீண்ட தூர பஸ்களில் ஒரு டிரைவர், ஒரு மாற்று டிரைவர், 2 கண்டக்டர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள்ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பணியாற்றுவார்கள்.
அதேபோல, 24 மணி நேர பயணத்தின்போது 3 டிரைவர்களும், 3 கண்டக்டர்களும் பணியில் ஈடுபடுகின்றனர்.இதை மாற்றியமைக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்சுக்கு தற்போது 3 டிரைவர்கள் உள்ளனர். புதியதிட்டத்தின்படி ஒரு டிரைவர் குறைக்கப்படுகிறார். இந்த பஸ்சில் சென்னையிலிருந்து திருச்சி வரை ஒரு டிரைவர்செல்வார். கூடுதல் நேரத்திற்கு அவர் "ஓவர் டைம்" ஊதியம் பெறுவார்.
பின்னர் திருச்சியிலிருந்து இன்னொரு டிரைவர் நாகர்கோவில் வரை செல்வார். அவருக்குரிய "ஓவர் டைம்"ஊதியம் கொடுக்கப்படும். இதன் மூலம் ஒரு டிரைவரின் தேவை குறைகிறது.
ஆனால், ஒருவரே நீண்டதூரம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படாமல் இருந்தால் சரி. செலவைக் குறைக்கிறோம்என்று பொது மக்களின் உயிர்களுடன் அரசு விளையாடுவது ஆபத்து.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications