சாத்தான்குளததில் அதிமுகவுக்கு ஆதரவாக த.மா.கா.கா. பிரசாரம்
நாகர்கோவில்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட புதிதாக உருவாகியுள்ளதமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
அதிமுக பின் பலத்துடன் காங்கிரஸ் கட்சியை உடைத்து இந்த அதிருப்தி காங்கிரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தஅதிருப்தி கோஷ்யிடில் இருந்த மணி நாடார் இறந்ததால் தான் இப்போது இடைத் தேர்தலே நடக்கிறது.
மணி நாடாரின் மனைவி ஜானகியை அதிமுக தனது கட்சியில் இழுத்துப் போட்டுவிட்டது. ஜானகியை வைததுப்பிரச்சாரம் செய்தால் அனுதாப ஓட்டுக்கள் அதிமுகவுக்குக் கிடைக்கும் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டுள்ளார்.
இந் நிலையில் ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கிக் கொண்டு கட்சியை உடைத்தாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளத.மா.கா.கா. தலைவர் டாக்டர் குமாரதாஸ் சாத்தான்குளத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக தன் கட்சியில் உள்ள 3காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இன்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய குமாரதாஸ், எங்களது கட்சியின் நான்கு எம்.எல்.ஏக்கள் மற்றும்500க்கும் மேற்பட்ட கட்சியினர் அதிமுகவின் வெற்றிக்காக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம்.
எங்கள் தலைவர் மூப்பனார் காட்டிய வழியில்தான் நாங்கள் செல்கிறோம். அதிமுகவே சரியான நண்பன் என்றுதலைவர் மூப்பனார் அடையாளம் காட்டியுள்ளார். எனவேதான் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறோம்என்றார் டாக்டர் குமாரதாஸ்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications