For Daily Alerts
Just In
நேதாஜி பிறந்த நாள்: தலைவர்கள் அஞ்சலி
சென்னை:
இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 107வது பிறந்த நாள் விழா இன்றுகொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நேதாஜியின் சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து,அமைச்சர்கள் ஓ. பன்னீர் செல்வம்,பொன்னையன், செம்மலை, சென்னை மாநகர துணை மேயர் கராத்தேதியாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ.க. சார்பில் அக்கட்சித் தலைவர் கிருபாநதி உள்ளிட்டோர் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் சார்பிலும் நேதாஜிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
-->


