வெடிகுண்டு வழக்கில் "அல்-உம்மா" பாஷா குற்றவாளி: தனி நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோயம்புத்தூரில் நடத்தியதைப் போல சென்னையிலும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டு வெடிகுண்டுகளைப்பதுக்கி வைத்திருந்த சதி வழக்கில் அல்- உம்மா தலைவர் பாட்சா உள்ளிட்ட 23 பேரும் குற்றவாளிகள் என பூந்தமல்லி தனிநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களுக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும்.

1998ம் ஆண்டு கோடம்பாக்கம், பூந்தமல்லி, தாம்பரம், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை நகரின் முக்கிய கட்டிடங்களான எல்.ஐ.சி.அலுவலகம், கோடம்பாக்கம் பாலம், ஜெமினி மேம் பாலம், ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யதீட்டப்பட்டிருந்த சதியும் வெளியானது.

இதைத் தொடர்ந்து அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 24 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகளைத்தொடர்ந்தனர். இந்த வழக்குகள் சென்னை-பூந்தமல்லியில் உள்ள தனி நீதிமன்றத்தில் (பொடா) விசாரிக்கப்பட்டுவந்தன.

கடந்த 5 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில் நீதிபதி ராஜேந்திரன் நேற்று மாலை தீர்ப்பு வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் பாட்சா உள்ளிட்ட 12 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபனமாகியுள்ளதால் அவர்கள்குற்றவாளியென நீதிபதி ராஜேந்திரன் தீர்ப்பளித்தார். நகரின் பல்வேறு இடங்களை குண்டு வைத்துத் தகர்க்க குற்றம்சாட்டப்பட்டவர்கள் போட்டிருந்த சதிச் செயல் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.

மீதமுள்ள 11 பேர் மீதும் வெடிகுண்டுகளைப் பதுக்கியது, தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இணைந்து செயல்படுதல் ஆகியகுற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்ட்டுள்ளன என நீதிபதி அறிவித்தார். எனவே, இவர்கள் அனைவரும் குற்றவாளிகே எனக் கூறியநீதிபதி ராஜேந்திரன் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் வாதங்களைக் கேட்ட பின்னர் வரும் திங்கள்கிழமை தண்டனைஅறிவிக்கப்படும் என்றார்.

முகம்மது ரபீக் என்பவரை மட்டும் வழக்கில் இருந்து நீதிபதி விடுவித்தார்.

தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி அல்-உம்மா பாஷா உள்ளிட்ட 24 பேரும் இன்று பூந்தமல்லிக்குக் கொண்டுவரப்பட்டதால் நீதிமன்றத்துக்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

இது தவிர பாஷா உள்ளிட்ட பலர் மீதும் கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கும் விசாரணைகோவையில் நடந்து வருகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+