தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை:
இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை ஆக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று திமுக தலைவர்கருணாநிதி சூளுரைத்துள்ளார்.
இந்திய எதிர்ப்புப் போராட்டங்களில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள்பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில்,
திமுகவின் அடிப்படைக் கொள்கை எது என்பதை நான் அடிக்கடி கூறியுள்ளேன். "மொழியால் தமிழர். இனத்தால்திராவிடர். நாட்டால் இந்தியர்" என்று பல முறை நான் தெரிவித்துள்ளேன்.
தமிழ் மொழி உணர்வு இருப்பதால்தான் இந்தியின் ஆதிக்கத்தைக் கடுமையாக எதிர்த்தோம். இலக்கிய வளம்,காவிய வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் கொண்ட தமிழை செம்மொழியாக்க வேண்டும். ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் ஆக்க வேண்டும்.
இதை மத்திய அரசு செய்ய வேண்டும். தமிழ் மொழி செம்மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் ஆகும் வரைஎங்களுடைய போராட்டம் தொடரும்.
மொழிப்போர் தியாகிகளுக்காக வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களை நாம் பாராட்டுகிறோம். அவர்களைப்போல் தமிழகத்தில் மேலும் பலரும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த வீரவணக்க நாளைக்கொண்டாடுகிறோம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின்போது சிறையில் மாண்டவர்கள், தீக்குளித்து இறந்தவர்கள், காவல்துறையினரின் அடக்குமுறையில் பலியானவர்கள், துப்பாக்கிக் குண்டுளை ரோஜா மலர்கள் போல் மார்பில்ஏற்றுக்கொண்டு உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இந்த நாளில் நாம் அஞ்சலி செலுத்துகிறோம்.
இந்த மொழிப்போர் தியாகிகளைப் போலவே வருங்கால இளைஞர்களும், அரும்புகளும் கொழுந்துகளுமாகஇருப்பவர்களும் நாளை நம் அன்னைத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்.
இதற்காகப் பாடுபட வேண்டும் என்ற உணர்வு வர வேண்டும். தேவைப்பட்டால் தன் உயிரையும் பலி கொடுக்கத்தயாராக இருக்க வேண்டும். இந்த எண்ணங்கள் வளரத்தான் நாம் வீரவணக்க நாளைக் கொண்டாடுகிறோம்.
இந்தி ஆதிக்கத்தைத் தகர்த்தால்தான் தமிழ் வாழ முடியும், தமிழர்களும் வாழ முடியும். நாம் கடுமையாகஎதிர்த்ததால்தான் கட்டாய இந்தித் திணிப்பை வாபஸ் பெற்றார்கள்.
இந்து மதத்தில் உள்ள இழிவுகள் நீக்கப்பட்டு, பஞ்சமன் மற்றும் பிராமணன் ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டு,எல்லோரும் கோவிலுக்குச் செல்லலாம். எல்லோரும் ஆண்டவனை வணங்கலாம். எல்லோரும் ஒரே குளத்தில்குளிக்கலாம். எல்லா மொழியிலும் வணங்கலாம்.
தமிழ் தள்ளப்பட்ட மொழியல்ல. தமிழுக்கும் ஆண்டவனை வணங்குகிற தகுதி உண்டு. தமிழுக்கு அந்தத் தகுதிஇல்லை, வடமொழிக்குத்தான் உள்ளது என்று சொன்னால்தான் எங்களால் ஏற்க முடியாது.
தமிழுக்கு ஏற்பட்ட இழிவு, தலித்துகளுக்கு இழைக்கப்படுகிற கொடுமை, பஞ்சமர்களுக்கு இழைக்கப்படும் பாதகம்,சூத்திரர்களுக்கு இழைக்கப்படும் இழிவு மற்றும் அவமானம் ஆகியவை அகற்றப்பட்டு இந்து மதம்விளங்குமேயானால் எம்மதமும் சம்மதம் என்கிற எங்களுக்கு இம்மதமும் சம்மதம்தான்.
திராவிடர் இனம் என்று ஏன் கூறுகிறோம்? திராவிடர் இனம், ஆரியர் இனம் என்று இரண்டு இனங்கள் உள்ளன.திராவிடர் கலாச்சாரம் வேறு, ஆரிய கலாச்சாரம் வேறு என்பதை யாரும் மறுக்க முடியாது.
திராவிட பூமியில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் இருந்தாலும்,தமிழகத்தில்தான் நீர்வளம் குறைவு.
திராவிடம் வளமாக இருக்க வேண்டுமானால், இந்த நீர்வளத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீர்வளத்தைப்பகிர்ந்து கொள்ள வேண்டுமானால் இந்த நான்கு மாநிலங்களிலும் ஓடும் நதிகளை இணைக்க வேண்டும் என்றார்கருணாநிதி.
-->


