For Daily Alerts
Just In
சென்னை கூவம் நதியில் ஆட்டோ டிரைவர் பிணம் கண்டெடுப்பு
சென்னை:
சென்னை கூவம் நதியில் ஒரு ஆட்டோ டிரைவரின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை-சிந்தாதிரிப்பேட்டையில் ஓடிக் கொண்டிருக்கும் கூவம் நதியில் இன்று காலை ஒரு பிணம் மிதந்துகொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலத்த ரத்தக் காயங்களுடன்கிடந்த அந்தப் பிணத்தை மீட்டனர்.
அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான மணி என்பவரின் உடல்தான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இதே பகுதியில் கூவம் நதியில் ஒரு பிணம் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில்இன்று மற்றொரு பிணமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்புநிலவுகிறது.
-->


