கோஷ்டி மோதல் எதிரொலி: மதுரை திமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்
சென்னை:
ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்களால் ஏற்பட்ட கோஷ்டிப் பூசல் எதிரொலியாக மதுரை மாநகர் மாநகர திமுகஅமைப்பு கலைக்கப்பட்டுள்ளது. கட்சியின் புதிய பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏவான காவேரி மணியம்நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் அழகிரியின் கட்டுப்பாட்டில் தான் திமுகவே உள்ளது. இங்கு கருணாநிதி சொல்வதைக் கூட நிர்வாகிகள்கேட்க மறுத்து வருகின்றனர். ஸ்டாலின் வந்தால் வரவேற்கக் கூட யாரும் வருவதில்லை. இதனால் அண்ணன்-தம்பிகள் இடையே கடும் மோதல் நடந்து வந்தது.
ஸ்டாலின் ஆதரவாளர்களை அழகிரியின் ஆட்கள் அவ்வபோது தாக்கியும் வந்தனர். ஆனால், முதலில்அழகிரியை கண்டித்து வந்த கருணாநிதி பின்னர் அவரை ஆதரிக்க ஆரம்பித்தார். இதனால் மதுரை மாவட்டதிமுகவினர் வெறுப்பில் இருந்து வந்தனர். பலமுறை தன் சொல்லையும் மீறி செயல்பட்டு வந்த அழகிரியைரஜினியின் உதவியால் அடக்கினார் கருணாநிதி.
ரஜினியிடம் மிகுந்த மரியாதை வைத்துள்ளவர் அழகிரி என்பது குறிப்பிடக்கத்தது. இந் நிலையில் இருகோஷ்டிகள் இடையே மோதல் அதிகரித்து வந்தது. மேயர் செ.ராமச்சந்திரன் கூட கருணாநிதியிடம் போய்புலம்பிவிட்டு வந்தார்.
அழகிரியின் தொல்லையால் கட்சியை விட்டே விலகுவதாகவும் மாஜி சபாநாயகரும் மதுரையின் மிக முக்கியபிரமுகருமான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மிரட்டி வருகிறார்.
இந் நிலையில் சமீபத்தில் அழகிரியை சென்னைக்கு அழைத்த கருணாநிதி அவருடன் கட்சி விவகாரம் குறித்துஆலோசனை நடத்தினார். அப்போது இரு கோஷ்டிகளையும் சேர்ந்தவர்களையும் நிர்வாகிகள் பட்டியலில் இருந்துநீக்கிவிட்டு புதியவர்களை நியமிக்கப் போவதாக கருணாநிதி கூறியிருந்தார்.
இதையடுத்து இப்போது மதுரை மாநகர திமுகவே கலைக்கப்பட்டுவிட்டது. இனி இதில் ஸ்டாலின், அழகிரி, மேயர்ராமச்சந்திரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சம எண்ணிக்கையில் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இதன்மூலம் ஒரு கோஷ்டியின் கை ஓங்குவது தடுக்கப்படும் என்று அண்ணா அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
மதுரை திமுக நிர்வாகம் கலைப்பு தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
கடந்த 19ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் மாநகர் மாவட்டக் கூட்டத்தை கூட்டி திமுக தலைவர் கருணாநிதிதலைமையில் தலைமைக் கழகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக மதுரையில் ஒரு சிலர் தொடர்ந்துபிரச்சினையை உண்டு செய்து கொண்டிருக்கிறார்கள்.
தலைமைக் கழகத்தின் முடிவுகளுக்கு மாறாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே மதுரை மாநகர மாவட்டக் கழகமும், புதிதாக உருவாக்கப்பட்ட 7 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும்கலைக்கப்படுகின்றன.
இன்று முதல் புதிய பொறுப்பாளராக சொ.செ. காவேரி மணியம் செயல்படுவார். கட்சி நிர்வாகிகள், கிளைக் கழகநிர்வாகிகள் காவேரி மணியத்துடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொண்டு கட்சிப் பணியாற்றிட வேண்டும் என்றுஅன்பழகன் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
இதில் காவேரி மணியம் மிக மூத்த திமுக தலைவராவார். ஆனால், அவருக்கு கடந்த தேர்தல்களில் எம்.எல்.ஏ. சீட்கூடத் தராமல் திமுக தலைமை நோகடித்து வந்தது. இதனால் அவரும் கட்சியில் அதிருப்தியுடன் தான் இருந்துவந்தார். ஆனால், கருணாநிதியின் மீது அபரிமிதமான பாசம் வைத்திருப்பவர். அழகிரிக்கு எதிரானவர். இப்போதுதான் இவருக்கு கட்சியில் மறுவாழ்வு கிடைத்துள்ளது.
ஒருமுறை கருணாநிதி தங்கியிருந்த மதுரை பாண்டியன் ஹோட்டலில் அழகிரி- ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே நடந்தமோதலில் காவேரி மணியத்தின் சட்டை கிழிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications