சென்னை மாணவருக்கு அமெரிக்க விருது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமெரிக்காவின் ஏடி& டி நிறுவனத்தின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது பெற (AT&T Leadership Award)சென்னையைச் சேர்ந்த மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2002ம் ஆண்டின் ஆசியா- பசிபிக் பகுதியைச் சேர்ந்த சிறந்த லீடர்ஷிப் கொண்ட மாணவர்களாக 6 இந்தியர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த சுப்பிரமணியன் ராமநாராயணனும் ஒருவர். இவர் அமெரிக்காவின்நார்த்வெஸ்ட்டர்ன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பாடத்தில் பி.எச்டி. ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் தவிர டெல்லியைச் சேர்ந்த திரிபாதி ஆர்யா, சுர்பி லீகா, கொல்கத்தாவைச் சேர்ந்த வைசாலி டே, ஹரியாணாவைச் சேர்ந்தராகுல் சாகர், சிங்கப்பூர் இந்திய மாணவரான சந்தீப் போஸ் ஆகியோரும் இந்த விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். இனி இவர்களது உயர் கல்விக்கான முழு செலவையும் ஏடி&டிதொலைத் தொடர்பு நிறுவனம் ஏற்கும். அத்துடன் 4,000 டாலர் பரிசும் வழங்கப்படும்.

இத் தகவலை டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+