ஆண்டுதோறும் தமிழ் இசை விழா: கருணாநிதி திட்டம்
சென்னை:
திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் கர்நாடக இசை விழாவைப் போல சென்னையில் முத்தமிழ் இசைவிழா நடத்த திமுக முடிவு செய்துள்ளது.
சென்னை-தி.நகர் திமுக எம்.எல்.ஏவான அன்பழகனின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்கருணாநிதி இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தமிழ் உணர்வை உருவாக்குகிற முறை இந்தத் திருமண முறை என்று பேராசிரியர் அன்பழகன்குறிப்பிட்டார்.
இந்தக் காலத்தில் தமிழ் என்றாலோ, தமிழ் உணர்வு என்றாலோ அதை வெறுப்பாக நோக்குகின்ற ஒரு கும்பல்என்ன காரணத்தினாலோ தமிழகத்திலே இன்று ஆதிக்கம் செலுத்தும் காட்சியை நாம் பார்க்கிறோம்.
அவர்கள் தமிழை வளர்க்க முன்வர மாட்டார்கள். வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் படைத்த நம்மையும்வெறுப்போடு நோக்குகிறார்கள்.
ஒரு காலத்திலே திராவிட இயக்கமானாலும் அல்லது வேறு எந்த ஒரு இயக்கமானாலும் தமிழகத்தில் வேரூன்றவேண்டுமானால் மொழி உணர்வை மக்களுக்கு ஊட்ட வேண்டும் என்ற துடிப்போடு வளர்ந்தன.
ஆனால் இன்றைக்கெல்லாம் அதற்கு நேர் மாறாக, தமிழ் என்று சொன்னாலே அது ஏதோ ஒரு மத வெறி, மொழிவெறி, சாதி வெறி என்று பேசுகிற, எழுதுகிற ஒரு நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.
பாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர் பாடிய தமிழிசைப் பாடல்களை நாம்ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாட வேண்டும்.
அவை பக்திப் பாடல்களாக இருக்கலாம். சைவ, வைணவத்தைப் போற்றுகின்ற பாடல்களாக இருக்கலாம். ஆனால்அவை எல்லாமே தமிழிசைப் பாடல்கள்.
இனி அடுத்தடுத்து அவர்களுடைய பிறந்த நாட்களை யார் விழா எடுத்துக் கொண்டாடினாலும் சரி,கொண்டாடாவிட்டாலும் சரி. சென்னை மாநகரத்திலே அந்த முத்தமிழ் இசைவாணர்களுடைய விழாவை திமுகசார்பில் கொண்டாடுவோம்.
திருவையாற்றில் ஆண்டுதோறும் நடக்கும் இசை விழாவைப் போலவே இந்த முத்தமிழ் இசை விழாவும்நடைபெறும். இவ்வாறு தமிழ் இசையை வளர்ப்பதன் மூலம்தான் தமிழ் உணர்வை நாம் வளர்க்க முடியும் என்றார்கருணாநிதி.
-->












Click it and Unblock the Notifications