நீதித்துறையுடன் மோதும் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நீதிமன்றம் சொல்லிவிட்டதாலேயே அரசின் திட்டம் தவறானதாகிவிடாது என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சமீபத்தில் விவசாயிகள் பட்டினிச் சாவு விவகாரத்தில் மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி தந்தது. பட்டினிச்சாவைத் தடுக்காத அரசு மக்கள் நல அரசு தானா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந் நிலையில் மீண்டும் நீதித்துறையுடன் மோதும் போக்கைத் தொடங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த அதிமுக ஆட்சியில்நேரடியாகவே நீதித்துறையுடன் மோதி வந்த அவர் டான்சிக்குப் பின் அமைதியாக இருந்தார். இப்போது மீண்டும் நீதித்துறையைவிமர்சித்துள்ளார்.

இன்று சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கருணாகரன் பேசுகையில், அரசின் பலதிட்டங்களை நீதிமன்றங்கள் விமர்சித்து வருகின்றன. பல திட்டங்களை நீதிமன்றங்கள் ரத்து செய்தும்விட்டன என்றார்.

இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா,

அரசின் திட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துவிட்டதாலேயோ, அல்லது அத் திட்டம் குறித்து நீதிமன்றம் ஏதாவது கருத்துத்தெரிவித்துவிட்டதாலேயோ அரசு செய்தது தவறு என்ற அவசர முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

பிரச்சனை எதிர்க் கட்சிகளிடம் தான் உள்ளது. எதெற்கெடுத்தாலும் இடைக் காலத் தடை வாங்கி அரசுத் திட்டங்களைசெயல்படுத்த விடாமல் தடுக்கின்றனர். அரசின் திட்டம் குறித்து நீதிமன்றம் ஏதாவது கருத்து தெரிவித்து விட்டதாலேயே அத்திட்டம் தவறானது என்றாகிவிடாது.

நீதிபதிகளும் மனிதப் பிறவிகள் தான். அவர்களும் சில நேரங்களில் தவறு செய்துவிடக் கூடியவர்கள் தான். இதில் மேற்கொண்டுநான் பேச விரும்பவில்லை என்று கடுப்புடன் கூறிவிட்டு அமர்ந்தார் ஜெயலலிதா.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+