நாகப்பாவை கடத்த உதவிய மேலும் 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டு, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்வீரப்பனுக்கு உதவிய மேலும் 2 முக்கிய நபர்களை கர்நாடக அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜோசப் என்ற மீனுக்கார் ஜோசப் மற்றும் சவாரியப்பா என்ற கோன் சவாரியப்பா ஆகிய இருவரும் நேற்றிரவுகைதுசெய்யப்பட்டனர்.

நாகப்பாவைக் கடத்துவதற்காக வீரப்பனுக்குத் திட்டம் போட்டுக் கொடுத்ததை அவர்கள் இருவரும் போலீசாரிடம்ஒப்புக் கொண்டுள்ளனர். கடத்தல் தொடர்பான வரைபடம் ஒன்றையும் அவர்களிடமிருந்து போலீசார்கைப்பற்றினர்.

ஒரு டெம்போ வேனை வாங்குவதற்காக ஜோசப்புக்கு வீரப்பன் ரூ.2 லட்சம் வரை கொடுத்துள்ளான். இந்தவேனையும் மற்றொரு பைக்கையும் போலீசார் ஏற்கனவே கைப்பற்றியுள்ளனர்.

நாகப்பாவின் வீட்டை ஜோசப் பலமுறை நோட்டமிட்ட பின்னர் வீரப்பனுக்கு பிளான் போட்டுத் தந்துள்ளான்.

அதேபோல் நேற்று கைது செய்யப்பட்ட மற்றொருவனான சவாரியப்பனும் வீரப்பன் கும்பலுடன் நீண்டநாட்களாகக் காடுகளுக்குள் சுற்றித் திரிந்தது தெரிய வந்துள்ளது. பல தமிழ் தீவிரவாதிகளை வீரப்பனுக்குஅறிமுகம் செய்து வைத்ததே இவன்தான் என்றும் போலீசார் கூறினர்.

யார் யாருடன் சென்றால் நாகப்பாவை எளிதில் கடத்திக் கொண்டு வரலாம் என்று வீரப்பனுக்குத் திட்டம் போட்டுக்கொடுத்ததே சவாரியப்பாதான்.

கர்நாடக வனப்பகுதியில் வீரப்பன்?

இதற்கிடையே தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள பொன்னாச்சி வனப் பகுதியில் வீரப்பன் கும்பலின் நடமாட்டம்தென்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து கர்நாடக அதிரடிப்படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத்தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் தன்னுடைய சொந்த ஊரான கோபிநத்தம் பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருந்ததாக வந்ததகவலையடுத்து, அப்பகுதி முழுவதையும் தமிழக அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். கோபிநத்தம்,சத்தியமங்கலம், அந்தியூர் வனப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தமிழக அதிரடிப்படையினர் முகாம்களைஅமைத்து தீவிர வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தேடுதல் வேட்டையை நேரில் பார்ப்பதற்காக தமிழக டி.ஜி.பியான ராஜகோபாலன் அந்தப் பகுதிகளுக்குச்சென்றார். அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.

இந்நிலையில் பொன்னாச்சி வனப் பகுதியில் வீரப்பன் கும்பல் நடமாடிக் கொண்டிருப்பதாக கர்நாடகஅதிரடிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியை கர்நாடக அதிரடிப்படையினர்சுற்றி வளைத்துள்ளனர்.

கர்நாடக அதிரடிப்படை தலைவரான ஜோதிப்பிரகாஷ் மிர்ஜி தலைமையிலான போலீசார் நேற்று இரவு முழுவதும்இப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தினார்கள். இரவிலும் ஒளிவிடும் துப்பாக்கிகளை அவர்கள் அப்போதுபயன்படுத்தினர்.

அப்பகுதியில் அவர்கள் முகாம் அமைத்து வீரப்பனைத் தேடும் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.அப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களிடமும் அவர்கள் வீரப்பன் நடமாட்டம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+