தமிழக வறட்சி: மத்திய குழு இன்று டெல்லி திரும்புகிறது- வாஜ்பாயிடம் அறிக்கை
சென்னை:
கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் வறட்சி நிலைமையை நேரில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் இன்று சென்னையில்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
மத்திய விவசாயத்துறை இணைச் செயலாளர் ஆஷிஷ் பகுகுணா தலைமையில் வந்த 4 பேர் குழுவினர் கடந்த 3 நாட்களாகதர்மபுரி, நாகப்பட்டிணம், சேலம், திருவாரூர் மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டனர்.
அவர்களிடம் காய்ந்து போன சம்பா பயிரைக் காட்டி விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த ஆய்வை முடித்துக் கொண்டுநேற்று சென்னை திரும்பிய இக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
அப்போது அவர்களிடம் தமிழகத்தில் வறட்சி மிகக் கடுமையாக இருப்பதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ. 2,027கோடியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க 9 லட்சம் டன் அரிசியும் உடனடியாகத் தேவைப்படுவதாகக் கூறி அதற்கானமனு ஒன்றையும் வழங்கினார்.
இந் நிலையில் மத்தியக் குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தலைமைச்செயலாளர் லட்சுமி பிரனேஷ், பொதுப் பணித்துறை, நிதித்துறை, விவசாயத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளின் செயலாளர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில் தமிழகத்தின் மோசமான நிலையை மத்தியக் குழுவினரிடம் அதிகாரிகள் விளக்கினர்.இதையடுத்து இன்று மாலை இக் குழு டெல்லி திரும்புகிறது. இவர்கள் அடுத்த வாரம் பிரதமர் வாஜ்பாயிடம் தங்களதுஅறிக்கையை சமர்பிப்பர்.
இதன் பின்னர் தமிழகத்துக்கான நிவாரணத் திட்டம் குறித்து மத்திய அரசு அறிவிக்கும். தமிழகத்தில் சென்னை தவிர அனைத்துமாவட்டங்களுமே வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டால் நிவாரணப் பணிகளை மத்திய அரசு தானே முன் நின்று மேற்கொள்ள வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.
இன்னும் வரவில்லை காவிரி நீர்:
இதற்கிடையே காவிரி டெல்டாவில் மிச்ச சொச்சம் இருக்கும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து கடந்த27ம் தேதி திறந்துவிடப்பட்ட நீர் இன்னும் திருச்சிக்கே வந்து சேரவில்லை.
இந் நிலையில் மேட்டூரில் நீர் மட்டம் வெகு வேகமாகக் குறைந்து வருவதால் இன்று மாலை அணை மூடப்படுகிறது.
திறந்துவிடப்பட்ட நீர் இன்று நள்ளிரவில் தான் திருச்சி கல்லணைக்கு வரும். பின்னர் அங்கிருந்து வெண்ணாறு மற்றும் காவிரிஆற்றில் இந்த நீர் பாசனப் பகுதிகளுக்கு திறந்துவிடப்படும்.
-->












Click it and Unblock the Notifications