திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம் வழுதி அதிரடி கைது
சென்னை:
திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம் வழுதி நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியை அதிமுக ஆதரவு தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் எம்.எல்.ஏவான டாக்டர்குமாரதாஸ் வாய்க்கு வந்தபடி திட்டினார். இதையடுத்து அவருக்கும் திமுக எம்.எல்.ஏக்களுக்கும் இடையே பெரும் மோதல்வெடித்தது.
தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் கருணாநிதியை குமாரதாஸ் மிகக் கேவலமாக பேசினார். இதையடுத்து திமுகஎம்.எல்.ஏவான பரிதி இளம் வழுதி பாய்ந்து சென்று குமாரதாசைத் தாக்க முயன்றார். அவரை பாட்டாளி மக்கள் கட்சிஉறுப்பினர்கள் தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதையடுத்து பரிதியை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் காளிமுத்து. மேலும் அவர் மீதுகிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது.
இந் நிலையில் பரிதி என்னைக் கொல்லப் போவதாக மிரட்டினார் என குமாரதாசும் அவரது கட்சியின் மதுரை எம்.எல்.ஏவானஹக்கீமும் சபாநாயரிடம் புகார் மனு தந்தனர். இதையடுத்து குமாரதாசுக்கும் ஹக்கீமுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதரப்பட்டுள்ளது.
இருவரின் பின்னாலும் ஏ.கே.-47 ஏந்திய போலீசார் வருகின்றனர். அவர்களது வீடுகளிலும் போலீசார் பாதுகாப்புக்குநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இவர்கள் கொடுத்த புகாரை வைத்து இன்று அதிகாலை பரிதி இளம் வழுதியை போலீசார் கைது செய்துள்ளனர்.சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு அதிகாலையில் சென்ற போலீசார் அவரைக் கைது செய்து கொண்டு சென்றனர்.
அதே நேரத்தில் என்னை குமாரதாஸ் ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டினார் என பரிதி இளம் வழுதியும் போலீஸ் கமிஷ்னர்அலுவலகத்தில் புகார் தந்துள்ளார். ஆனால், புகாரை வாங்க மாட்டேன் என்று கூறிவிட்டு சென்னை கமிஷ்னர் விஜய்குமார்ஐ.பி.எஸ். தனது அறையிலிருந்து ஓடிவிட்டார்.
இதையடுத்து கமிஷ்னர் அலுவலக ஊழியரிடம் இந்தப் புகாரைக் கொடுத்துவிட்டுத் திரும்பினார் பரிதி. தலித் சமூகத்தைச் சேர்ந்தபரிதி இளம் வழுதியை அதிமுக அரசு குறி வைப்பது இது முதல் முறையல்ல.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பரிதியின் வீட்டை அதிமுக சார்பில் எழுப்பூரில் போட்டியிட்ட ஜான் பாண்டியன் தனதுரெளடிக் கும்பளுடன் சென்று தாக்கினார். ஆனால், அந்தத் தேர்தலில் வென்ற அதிமுக அரசு பரிதி மீது வழக்குப் போட்டுஅவரைக் கைது செய்தது.
இப்போது மீண்டும் பரிதி கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை குற்றப்பிரிவு துணை கமிஷ்னர் கிருஷ்ணமூர்த்திதலைமையிலான போலீசார் சாந்தோமில் உள்ள பரிதியின் வீட்டுக்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அதிகாலையில் மாஜிஸ்திரேட்டின் வீட்டில் பரிதியை ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை 15 நாள் காவலில் வைக்கமாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் நிருபர்களிடம் பேசிய பரிதி, இது ஜெயலலிதாவின் கேடுகெட்ட அரசியல் பழி வாங்கும்செயல். என் கைது குறித்து திமுக தலைமை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றார்.


