அம்பேத்கர் சிலை அவமதிப்பு: 2 பா.ம.கவினர் வெட்டிக் கொலை
திருவள்ளூர்:
சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகே அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்டகலவரத்தில் 2 பாட்டாளி மக்கள் கட்சியினர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனால் வட மாவட்டங்களில் பெரும் பதற்றம்நிலவுகிறது.
திருவூர் என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது. வட மாவட்டங்களில் பல பகுதிகளிலும் தலித்களுக்கும் வன்னியர்களுக்கும்இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம். திருவூரில் நாளை பா.ம.க. கொடியேற்று விழா நடக்க இருந்தது.
இதற்காக கொடிக் கம்பம் நடப்பட்டது. அந்தக் கொடிக் கம்பத்தை ஒட்டி பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணி படம்வரையப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் படத்தின் மீது சிலர் தார் ஊற்றினர். இதையடுத்து பா.ம.கவினருக்கும் தலித்களுக்கும்இடையே மோதல் ஏற்பட்டது.
ஆனால்,போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தினர். இந் நிலையில் இன்று காலை அம்பேத்கரின் சிலைஅலங்கோலப்படுத்தப்பட்டிருந்தது. சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் முக்கிய சாலைகளில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் வயல் வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 2 பா.ம.க. இளைஞர்களை ஒரு கும்பல்சுற்றி வளைத்தது. சுமார் 10 பேர் கொண்ட அக் கும்பல் அவர்களை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. ஒரு கும்பல் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தைத்தடுத்தனர். இச் சம்பவத்தையடுத்து கலெக்டர், டி.ஐ.ஜி. ஜாங்கிட் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
அங்கு செங்கல்பட்டு மாவட்ட போலீசார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.


