தடையை மீறும் ஆம்னி பஸ்கள்: மக்களுக்கு குஷி, போலீஸாருக்கு தலைவலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு இடையூறாகஆம்னி பஸ்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக போலீஸார் புகார் கூறுகின்றனர்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புறநகர்ப் பகுதியான கோயம்பேட்டில், மிகப் பெரியவெளியூர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்துதான் அனைத்து அரசு, தனியார் மற்றும் ஆம்னி பஸ்கள் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சில ஆம்னி பஸ்கள் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கி நகருக்குள்ளிருந்தேஇயங்கி வருகின்றன.

இந்நிலையில் சமீப காலமாக ஆம்னி பஸ்களின் நடமாட்டம் சென்னை நகருக்குள் அதிகரித்துவிட்டதாகத்தெரிகிறது. தடையுத்தரவை மீறி நகருக்குள் ஆம்னி பஸ்களை இயக்கியவர்கள் மீது, இந்த வாரம் மட்டும் இதுவரை47 வழக்குகள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிலும் நேற்று முன்தினம் மட்டும் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் மொத்தம் 391வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.1,65,000 வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துபோலீஸார் கூறினர்.

அதேசமயம், கே.பி.என். ஆம்னி பஸ் நிறுவனம் தனது 13 பஸ்களை நகருக்குள்ளிலிருந்து இயக்க நீதிமன்றத்தில்அனுமதி பெற்று இயக்கி வருவதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. பிற பஸ்களை புறநகர்ப் பகுதியிலிருந்துஇயக்கி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடைகளை மீறும் ஆம்னி பஸ்களைத் தடுத்து நிறுத்தி வழக்கு போடுவதும், அபராதம் வசூலிப்பதும் பெரும்தலைவலியாக இருப்பதாக போக்குவரத்து போலீஸார் கருதுகின்றனர்.

அதேசமயம் தங்களுக்கு வசதியாக மறுபடியும் நகருக்குள்ளேயே ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும் என்றுசென்னை மக்கள் விரும்புகிறார்கள். இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்றுதெரியவில்லை!

-->

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+