மாநில அரசுக்கு தேர்தல் கமிஷன் வைத்த ஆப்பு
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் தேர்தல் பணியில் மாநில அரசு ஊழியர்களைப் பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடைவிதித்துவிட்டது.
இத் தொகுதியில் அதிமுகவினரின் நெருக்குதல்களுக்கும் அரசுக்கு ஆதரவான போலீசாரின் நெருக்குதல்களுக்குமாநில அரசு ஊழியர்கள் பணிந்து செயல்பட வாய்ப்பிருப்பதால் தேர்தலில் தில்லுமுல்லு நடக்கலாம் என தேர்தல்கமிஷன் கருதுகிறது.
வழக்கமாகவே அதிமுக ஆட்சியில் நடந்த இடைத் தேர்தல்களில் எல்லாமே விதிமுறைகள் குப்பையில்போடப்பட்டன. ரெளடிகள் உதவியுடன் பல தேர்தல் சாவடிகள் சூறையாடப்பட்டன. அதிமுகவினரால் தேர்தல்அதிகாரிகள் மிரட்டப்பட்டதும் உண்டு.
இதையடுத்து சாத்தான்குளம் தேர்தலை மத்திய அரசு ஊழியர்களைக் கொண்டு தேர்தல் நடத்த மாநில தலைமைத்தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு சாரங்கி அனுப்பியுள்ள பேக்ஸ் உத்தரவில், சாத்தான்குளத்தில்இடைத் தேர்தல் நடக்கவுள்ள 173 வாக்குச் சாவடிகளிலும் மாநில அரசு ஊழியர்களைப் பயன்படுத்தக் கூடாது.மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
நேற்று தான் இந்தத் தேர்தலுக்கான மத்தியப் பார்வையாளர்களாக அணுசக்தித் துறை இணைச் செயலாளர் வி.பி.ராஜா, பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் அன்சுலி ஆர்யா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந் நிலையில் தேர்தல் நடத்தும் பணியும் மத்திய அரசு ஊழியர்களிடம் தந்து, மாநில அரசும் அதிமுகவினரும்முறைகேடுகள் செய்வதைத் தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications