கண் பார்வை இழந்தவர்கள் அரசு மருத்துவமனையை விட்டு வெளியேற மறுப்பு
மதுரை:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு பார்வை பாதிக்கப்பட்ட 45நோயாளிகள் மதுரை அரசு பொது மருத்துவமனையிலிருந்து வெளியேற மறுத்து வருகிறார்கள்.
கண் பார்வை பாதிக்கப்பட்ட 45 பேரில் 18 பேருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. மற்ற 27 பேருக்கும்,விரைவில் உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அவர்களும் பார்வையை இழந்து விடும் அபாயத்தில்உள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவர்களில் குணமடைந்து விட்ட 18 பேரையும் டிஸ்சார்ஜ் செய்தும் கூட அவர்கள் வெளியேற மறுத்துவருகிறார்கள்.
தங்களுக்கு முழுப் பார்வை கிடைக்கும் வரை இங்கேயேதான் இருப்போம் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
அதேபோல், மற்ற 27 பேருக்கும் உடனடியாக "விட்டிரக்டமி" என்ற அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.ஆனால் அந்த வசதி அரசு மருத்துவமனையில் இல்லாத காரணத்தால், அவர்களை அரவிந்த் கண்மருத்துவமனைக்குச் செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அங்கே போகடியாது என்று 27 பேரும் மறுத்து வருகிறார்கள். இதனால் அவர்களது பார்வை முற்றிலும்பறிபோகும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அவர்களை சமாதானப் படுத்தி விரைவில் அவர்களை அரவிந்த் மருத்துவமனைக்கும் முயற்சியில் அரசுமருத்துவமனை டாக்டர்கள் இறங்கியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications