சிங்கப்பூரில் உயிரியல் ஆயுதத் தாக்குதல் நடக்கும் அபாயம்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களால்இத் தாக்குதல்கள் நடக்கலாம் என அமெரிக்கா, பிரிட்டிஷ் உளவுப் பிரிவுகள் சிங்கப்பூரை எச்சரித்துள்ளன.

இதையடுத்து ரைசின் போன்ற உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு உள்ளான யாராவது சிகிச்சைக்கு வந்தால் உடனே போலீசாரிடம்தெரிவிக்குமாறு சிங்கப்பூர் மருத்துவர்களுக்கு அந் நாட்டு நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 6,000சிங்கப்பூர் டாக்டர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் ரைசின் பிடிபட்டது. இதைப் பதுக்கி வைத்திருந்த அல்-கொய்தாதீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 ஆப்பிரிக்க நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் சிங்கப்பூரில் இந்த ரைசின் தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்கள்திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இராக்கில் சதாம் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் குர்திஷ் இனத் தீவிரவாதிகள் தான் இந்தஉயிரியல் ஆயுதத்தைத் தயாரிக்க அல்-கொய்தா கும்பலுக்குக் கற்றுத் தந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின்பாவல் கூறியுள்ளார்.

Ricinus communis எனப்படும் ஆமணக்கு வகையைச் சேர்ந்த செடியின் விதையில் இருந்து தான் ரைசின்தயாரிக்கப்படுகிறது. இந்த ரைசின் காற்றில் கலந்து வந்து அசை சுவாசிக்கும்போது முதலில் நுரையூரல் பாதிக்கப்படும், உடனேசிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் அடுத்த 48 மணி நேரத்தில் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 72 மணிநேரத்தில் மரணத்தையே உண்டாக்கும் விஷத் தன்மை கொண்டது.

சிங்கப்பூர் நலத்துறை இயக்குனர் டான் கோர்க் சுவான் இது தொடர்பாக மருத்துவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளார். அதில்இந்த ரைசின் தாக்குலுக்கு எதிரான மருந்துகளோ, வாக்சீனோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் அல்-கொய்தாவுக்கு நெருக்கமான ஜெமா இஸ்லாமியா என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.ஐரோப்பிய, அமெரிக்க நாட்டினரைக் குறி வைத்து ரைசில் தாக்குதல் நடத்த இந்த அமைப்பு முயன்று வருவதாகத் தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+