பவானி அணை விவகாரம்: திருவனந்தபுரத்தில் தமிழக அமைச்சர்கள் குழு
சென்னை:
பவானி அணை பிரச்சனை தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்கள் இன்று பிற்பகல் பேச்சு நடத்த உள்ளனர்.இதற்காக சென்னையிலிருந்து தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் இன்று காலை சிறப்பு விமானம் மூலம்திருவனந்தபுரத்திற்குக் கிளம்பிச் சென்றனர்.
பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் தடுப்பு அணைக் கட்ட கேரளம் திட்டமிட்டுள்ளது. இதற்குதமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த அணை கட்டப்பட்டால் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலமும்பாழ்பட்டுப் போகும் என்பதால் இத் திட்டத்தை தமிழகம் எதிர்த்தது. மேலும் சுமார் 40 லட்சம் மக்கள் இதனால்குடிநீர் கிடைக்காமல் திண்டாடுவார்கள் என்பதால் அவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அணை கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கேரள முதல்வர் ஆண்டனிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதினார்.
இப் பிரச்சனை குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தலாம் என்று கேரள முதல்வர் யோசனைதெரிவித்தார்.
இதையடுத்து கேரள அமைச்சர்களுடன் பேச்சு நடத்த தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நிதிஅமைச்சர் பொன்னையன், சட்ட அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித் துறைசெயலாளர் நாராயணன், பொதுப்பணித் துறை செயலாளர் குற்றாலிங்கம், காவிரி தொழில்நுட்பக் குழுவின்தலைவர் மோகனகிருஷ்ணன், மின்வாரியத் தலைவர் ஞானதேசிகன், தலைமைப் பொறியாளர்கள் முத்துபொம்முமற்றும் அரிராம் ஆகியோர் இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் கிளம்பிச்சென்றனர்.
சாத்தான்குளத்தில் தீவிர இடைத் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள பன்னீர் அங்கிருந்து நேரடியாகத்திருவனந்தபுரத்திற்குச் சென்று விட்டார்.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் கூட்டத்தில் கேரள அமைச்சர் ஜேக்கப் தலைமையிலான உயர் மட்டக்குழுவினருடன் தமிழகக் குழு பேச்சு நடத்தும்.
இதற்கிடையே இன்று கேரள சட்டசபையில் பேசிய ஜேக்கப், இன்றைய கூட்டத்தின் போது பவானி அணைவிவகாரம் தவிர பரம்பிக்குளம்- ஆழியாறு, முல்லை- பெரியாறு அணை தொடர்பான பிரச்சனைகளும்விவாதிக்கப்படும் என்றார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications