விவசாயிகளுக்கு உதவி கோரி தமிழகம் முழுவதும் பா.ம.க. போராட்டம்
சென்னை:
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 நிதியுதவி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ம.கவினர் இன்று போராட்டம் நடத்தினர்.
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 நிதியுதவி, புஞ்சை நிலங்களை வைத்திருப்பவர்களுக்குஏக்கருக்கு ரூ.3,000 நிதி, வறட்சியால் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த அனைவருக்கும் மாதம் 30 கிலோ அரிசி,விவசாயிகள் வாங்கிய கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்தல், நில வரி, வீட்டு வரி ஆகியவற்றை ரத்துசெய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,
நாங்கள் கோரியுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடுகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். மேலும்பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்குமே 30 கிலோ அரிசியை வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கவில்லை என்றால் அதிமுகவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டும்தான் அரிசி வழங்கப்படுவதாகஅர்த்தம் என்றார் மணி.
இதேபோல் திருச்சியிலும் தாலுகா அலுவலகத்தின் முன் பா.ம.கவினர் போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்குஇழப்பீடு வழங்க வேண்டும், அவர்கள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அப்போதுஅவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பா.ம.கவினர் போராட்டம் நடத்தினர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications