ஆற்காடு வீராசாமி மீதான ஜெ.யின் அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கின்விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியின்போது தாக்கப்பட்ட முன்னாள் தமிழக தலைமைச் செயலாளரான டி.வி.வெங்கட்ராமனை மருத்துவமனையில் சென்று ஜெயலலிதா பார்த்து உடல் நலம் விசாரித்தார். இதை விமர்சனம்செய்து வீராசாமி அறிக்கை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து வீராசாமி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். சென்னை எழும்பூர்மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி வீராசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அம்மனுவில்,
என் வக்கீல் மூலமாக கேள்விகளுக்குப் பதில் கூற அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தேன். ஆனால் எழும்பூர்நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.
மருத்துவக் காரணங்களுக்காக நான் விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் புறக்கணித்து விட்டது. நீதிமன்றத்தில்நான் ஆஜராக வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் கூறியிருப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணானது.
எனது தரப்பு வக்கீல் மூலம் சட்டப் பிரிவு 313ன் கீழ் விசாரணைக்கு முறையிட எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்.அதுவரை இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், வீராசாமி மீது தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்க இடைக்காலத்தடை விதித்தார். மேலும் இதுகுறித்து வரும் 21ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications