தமிழகத்தில் தயாரான ரயில் பெட்டிகளை குறை சொல்வதா?- ஆந்திர முதல்வருக்கு கண்டனம்
சென்னை:
சென்னை ஐ.சி.எப். (ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை) தொழிற்சாலையில் தயாரித்து,ஹைதராபாத்திற்கு அனுப்பப்பட்ட ரயில் பெட்டிகள் தரக் குறைவாக உள்ளதாக ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு பேசியுள்ளதற்கு ஐ.சி.எப். ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் மெட்ரோ ரயில் போக்குவரத்திற்காக, சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்துரயில் பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றைப் பரிசோதித்த நாயுடு, பெட்டிகளின் தரம்குறைவாக இருப்பதாகவும், அதை சென்னைக்கே திருப்பி அனுப்பப் போவதாகவும் கூறியிருந்தார்.
இதனால் ஐ.சி.எப். தொழிலாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள்கூறுகையில்,
இரவு, பகலாக நாங்கள் இங்கு பணியாற்றுகிறோம். நாங்கள் மட்டுமல்லாது, அதிகாரிகளும்எங்களுடன் இருந்து பெட்டிகள் தயாரிப்பதை மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக, பல வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்துவருகிறோம். இந்தியாவில் சிறந்த ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை என்ற பெயரையும்ஐ.சி.எப். பெற்றுள்ளது.
இந்நிலையில் ஐ.சி.எப். குறித்து நாயுடு தரக் குறைவாகப் பேசியுள்ளார். குறைந்த முதலீட்டில், அதிகதரத்தை எதிர்பார்ப்பது நியாயமல்ல. மேலும் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில்களுடன்ஹைதராபாத் ரயில்களை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.
சிறந்த பெட்டிகளைத் தயார் செய்து கொடுத்தும் எங்களுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார்நாயுடு. அவருக்கு ஐ.சி.எப். தொழிலாளர்களாகிய நாங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறினர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications