செங்கல்வராயன் விவகாரம்: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டேனா?- ராமதாஸ் பாய்ச்சல்
சென்னை:
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரத்தில் நான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதாக வந்தசெய்திகளால் மன வேதனை அடைந்துள்ளேன் என்று பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
செங்கல்வராயன் அறக்கட்டளையை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி பதவியேற்கவந்தபோது, பாமக தலைவர் ஜி.கே. மணி, எம்.எல்.ஏவான காடுவெட்டி குரு உள்ளிட்ட பலர் அவர்மீது தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக 20க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். மணியும், குருவும்தலைமறைவாக இருந்து பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ராமதாசுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்துநீதிமன்றத்தில் ஆஜரான ராமதாஸ் அங்கு இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டதாக செய்திகள்வெளியாகின.
ஆனால் இந்தச் செய்திகளை ராமதாஸ் மறுத்துள்ளார். இன்று சென்னையில் அவர் இது தொடர்பாகநிருபர்களிடம் கூறுகையில்,
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக நான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதாகவெளியான செய்திகள் அனைத்தும் தவறு.
நீதிமன்றத்தில் நான் மன்னிப்பு கேட்கவே இல்லை. என்னுடைய வழக்கறிஞர் மாசிலாமணி மூலம்நான் எழுதிக் கொடுத்த பிரமாணப் பத்திரத்திலும் கூட நான் மன்னிப்பு கேட்டது போல் எந்தவார்த்தையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
என்னுடைய வழக்கறிஞர் கூட தன்னுடைய வாதத்தின்போது நான் மன்னிப்பு கேட்டதாகஎப்போதும் கூறவே இல்லை.
ஆனால் நான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகிவிட்டன. அவைஎன்னை மிகவும் மன வேதனையில் ஆழ்த்தியுள்ளன.
நீதிமன்றத் தீர்ப்பின் நகல் என் கைக்கு வருவதற்குக் கால தாமதம் ஏற்பட்டதால்தான் நான் இவ்வளவுநாளும் இதைப் பற்றி எதுவும் கூறாமல் இருந்தேன். தற்போது நான் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லைஎன்ற ஆதாரத்துடன் தீர்ப்பின் நகல் வந்துள்ளது. அதனால்தான் இன்று இதை நான் தெரிவிக்கிறேன்என்றார் ராமதாஸ்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications