For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாத்தான்குளத்தில் அமைச்சர்களுடன் சுற்றி வரும் பயங்கர ரெளடி

By Staff
Google Oneindia Tamil News

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் வெங்டேச பண்ணையார் என்பவர் தலைமையில் தான் அதிமுகவினர் ரெளடிகளைக் குவித்துவைத்திருப்பதாகவும் இவரைக் கொண்டே கள்ள ஓட்டுக்கள் போடவும், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றவும்ஆட்கள் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.

சாத்தான்குளத்தில் மிக அதிசயமாக வாசனுடன் சேர்ந்து நேற்று பிரச்சாரம் செய்தார் இளங்கோவன். இத்தேர்தலையொட்டி டெல்லியில் இருந்து வந்துள்ள தமிழக காங்கிரஸ் பார்வையாளர் ரமேஷ் சென்னிதலாவுடன்விவாதிக்க இன்று சென்னை வந்தார் இளங்கோவன்.

அப்போது நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

சாத்த்ன்குளம் தொகுதி முழுவதும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும்போது காரில் இருந்து இறங்கவேயில்லை.தொகுதி மண்ணையே மிதித்தாக அந்த அம்மையார் தொகுதி மக்களை எப்படி மதிப்பார்?

பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட வெங்கடேச பண்ணையார் என்பவன்சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் மற்றும் அமைச்சர்களுடன் போலீஸ் பாதுகாப்புடன்தொகுதியில் சுற்றி வருகிறான்.

இவன் மீது பிடிவாரண்ட் உள்ளது. இவனை எங்கு பார்த்தாலும் கைது செய்ய வேண்டிய போலீசாரேஅவனுக்கு பாதுகாப்புத் தந்து சுற்றி வருவது மகா கேவலமான செயல். இந்தப் போலீசை நம்பிஎப்படி தேர்தல் ஒழுங்காக நடக்கும் என்று நினைக்க முடியும்?

கிருஸ்துவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் ஓட்டு போட வருபவர்களை விரட்டி அடிக்கவெடிகுண்டுகளை வீசவும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவும் அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை வெங்கடேச பண்ணையார் தலைமையிலான ரெளடிகள் தான செய்துவருகின்றனர். இவர் தலைமையில் கள்ள ஓட்டு போடவும், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றவும்ரெளடிகள் தயார் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திருப் பணிகளுக்கு இவன் ரூ. 2 கோடி கேட்டுள்ளான். ஆனால், பேரம் பேசி ரூ. 1.3 கோடிகொடுத்து இவனை அழைத்து வந்துள்ளது அதிமுக என்றார் இளங்கோவன.

ரமேஷ் சென்னிதலா கூறுகையில், சாத்தான்குளம் இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவும் அவரதுஅமைச்சர்களும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதாவுடன் சாத்தான்குளத்தில்முகாமிட்டுள்ள அமைச்சர்கள் தங்களுடன் வந்துள்ளஅதிகாரிகளையும் கட்சிப் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் அரசு நிர்வாகமேமுடங்கிக்கிடக்கிறது. பொய்யான வாக்குறுதிகளையும் ஜெயலலிதா கூறி வருகிறார் என்றார்.

ஜெ. அள்ளிவிடும் வாக்குறுதிகள்:

இதற்கிடையே சாத்தான்குளம் தொகுதியில் மகளிர் கல்லூரி, பாலிடெக்னிக், விளையாட்டுஸ்டேடியம் ஆகியவை கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதிஅளித்து பிரசாரம் செய்து வருகிறார்.

திமுகவைத் திட்டுவதாலோ, காங்கிரசைத் திட்டுவதோ வாக்குக் கிடைக்காது என்பதுபுரிந்துவிட்டதால் வாக்குறுதிகள் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார் ஜெயலலிதா.

அமுதக்குடி, பன்னம்பாறை, நெடுங்குளம் தொடங்கி பேய்க்குளம் வரை பிரச்சாரம் செய்தஜெயலலிதா பேசுகையில், இந்தத் தொகுதியின் நீண்டகாலக் கோரிக்கைகளான மகளிர் கல்லூரி,பாலிடெக்னிக், விளையாட்டு ஸ்டேடியம் ஆகியவற்றை கட்டித் தருவேன் என உறுதியளிக்கிறேன்.

இங்கு சுண்ணாம்புக் கல் படிவுகள் நிறையவே உள்ளது. எனவே, இங்கு சிமென்ட் தொழிற்சாலையைநிறுவ அரசு நடவடிக்கை எடுக்கும். இதன்மூலம் இப் பகுதி மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள்ஏற்படும்.

அதேபோல நெடுங்குளம் பகுதியில் கபடி வீரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். வாலிபால்வீரர்களும் உள்ளனர். இந்த இரு விளையாட்டுக்களுக்கும் இப்பகுதியில் நல்ல ஆதரவு உள்ளது.ஆனால், விளையாட நல்ல மைதானம் இல்லை.

எனவே தேசியஅளவிலும், சர்வதேச அளவிலும் இப்பகுதி வீரர்கள் சாதனை படைப்பதற்குவசதியாக அருமையான விளையாட்டு ஸ்டேடியம் கட்டித் தரப்படும்.

இதை வாக்குறுதியாக மட்டும் சொல்லவில்லை. நிச்சயம் இது நிறைவேற்றப்படும்என்றார்ஜெயலலிதா.

இதற்கிடையே இன்றுடன் பிரச்சாரத்தை முடித்துவிட ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக பொதுப்பணித்துறைஅமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஆனால், நாளை தான் அவர் சென்னை திரும்புகிறார். முதலில் பிரச்சாரம்நீட்டிக்கப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அதற்கான தேவையே ஏற்படவில்லை என்றும்,திட்டமிட்டபடி 5 நாள் பிரச்சாரத்தை இன்றே ஜெயலலிதா முடிப்பார் என்றும் பன்னீர்செல்வம் தனது அறிக்கையில்கூறியுள்ளார்.

காங்கிரஸை தோற்கடிப்போம்: பா.ஜ.க.

இதற்கிடையே சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க தேசிய உணர்வு கொண்ட அனைவரும் உறுதிபூண வேண்டும்என்று தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதக் கலவரத்தைத் தூண்டி வெற்றி பெற காங்கிரஸ் முயலுகிறது.சிறுபான்மையினரின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள அக்கட்சி வெற்றி பெறுவது தேசபக்தி கொண்டவர்களுக்குகிடைக்கும் தோல்வியாகும் என்றார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X