சாத்தான்குளம்: மறு வாக்குப் பதிவு கோரிக்கை நிராகரிப்பு- நாளை வாக்கு எண்ணிக்கை
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதாகக் கூறப்படும் 10 வாக்குச் சாவடிகளில்மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியதை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது.
சாத்தான்குளம் தொகுதியில் நேற்று முன்தினம் நடந்த இடைத் தேர்தலின்போது 10 வாக்குச்சாவடிகளில் அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர்.
கள்ள ஓட்டுப் போடுவதற்காக வந்திருந்த அதிமுகவினரைப் புகைப்படம் எடுத்த பத்திரிக்கைபுகைப்பட நிருபர்கள் மீது அவர்கள் செருப்பு மற்றும் கற்களை வீசி எறிந்து விரட்டினர்.
இது தொடர்பாக காங்கிரஸ் செயல் தலைவரான இளங்கோவன் தேர்தல் கமிஷனிடம் புகார்தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட 10 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும்என்றும் கோரியிருந்தார்.
ஆனால் மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது.
நாளை வாக்கு எண்ணிக்கை:
இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு சாத்தான்குளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம், காங்கிரஸ் வேட்பாளரும் வழக்கறிஞருமான மகேந்திரன்உள்ளிட்ட 25 பேர் இங்கு போட்டியிட்டனர்.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புடன்மின் வாக்குப் பதிவு எந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன
இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மொத்தம் 10மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். 50 அதிகாரிகள் வாக்குகளை எண்ணுவார்கள்.18 சுற்றுக்களாக இந்த வாக்குகள் எண்ணப்படும்.
மின் வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், காலை 11 மணிக்கே இத்தொகுதிஎம்.எல்.ஏ. யாரென்பது தெரிந்து விடும்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications