வைகோவுக்கு வாஜ்பாய் கடிதம்: வீடியோ ஆதாரங்களை பார்த்த மதிமுகவினர்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளரான வைகோவுக்கு பிரதமர் வாஜ்பாய் நலம் விசாரித்து கடிதம் எழுதியுள்ளார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்வைகோ. பல மாதங்களாக சிறை வாசம் மேற்கொண்டு வரும் வைகோவை பல்வேறு கட்சித்தலைவர்களும் பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.
மத்திய அரசு தரப்பில் ஆரம்பத்தில் யாரும் எந்த ஆதரவும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.இதனால் வைகோ அதிருப்தியுடன் இருப்பாதாக செய்திகள் வெளியான பிறகு பாதுகாப்பு அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ், பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் சிறைக்குவந்து வைகோவைச் சந்தித்தனர்.
இந்நிலையில் வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்து வாஜ்பாய் கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில், "உங்கள் உடல் நலம் குறித்து அறிய விரும்புகிறேன். விரைவில் நீங்கள் விடுதலையாகவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் வாஜ்பாய்.
வைகோ கைது செய்யப்பட்டு எட்டு மாதங்கள் முடியவுள்ள நிலையில் தற்போதுதான் அவருக்குமுதல் முறையாக வாஜ்பாய் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகோவுக்கு காட்டப்பட்ட வீடியோ ஆதாரம்
இந் நிலையில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோ உள்ளிட்ட 8 மதிமுகவினருக்கும் எதிராக காவல் துறையினர்தாக்கல் செய்துள்ள வீடியோ ஆதாரங்கள் இன்று அவர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன. அதே போல ஆடியோகேசட்டுகளும் போட்டுக் காட்டப்பட்டன.
வைகோ மற்றும் 8 பேருக்கும் பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் இன்று இந்த வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் காட்டப்பட்டன.இதற்காக அனைவரும் சிறைச் சாலைகளில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.
வைகோ உள்ளிட்ட ஒன்பது மதிமுகவினரும் ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி நீதிமன்றத்தில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications