மதுரை அருகே வேன்-பஸ் மோதல்: 2 சிறுமிகள் உள்பட 7 பேர் பலி
மதுரை:
மதுரை அருகே வேனும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கரமான விபத்தில் 2சிறுமிகள் உள்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் சிவராத்திரியை முன்னிட்டுவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு பேச்சியம்மன்கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.
அந்த வேன் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சமத்துவபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே நாகர்கோவிலிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்அதன் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் வேன் முழுவதும் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது. இந்தப் பயங்கரமானவிபத்தில் 2 பெண்களும் ஒரு சிறுவனும் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 22 பேர் திருமங்கலம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அங்கு இரண்டு சிறுமிகள்உள்பட மூன்று பேர் இறந்தனர். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் மற்றொருவர் இறந்தார்.
அர்ஜுனன் (70), பிரபாகரன் (40), சிவசங்கரி (9), சங்கீதா (7), முனியாண்டி (35), சிங்கராஜ் (15)மற்றும் மாரிமுத்து (40) ஆகியோர்தான் இவ்விபத்தில் இறந்துள்ளனர்.
திருமங்கலத்தில் சிகிச்சை பெற்று வந்த எஞ்சிய 18 பேரும் பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு பேர் பின்னர் தனியார்மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்தப் பயங்கரமான விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரைமாவட்ட எஸ்.பி. அபி பிரகாஷ் நேரில் விசாரணை நடத்தினார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications