கிரிக்கெட் வெற்றி: பெங்களூரில் கலவரம்- துப்பாக்கி சூடு
பெங்களூர்:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதைக்கொண்டாடும் வகையில் பெங்களூரில் நடந்த ஊர்வலம் வன்முறையாக வெடித்தது. அப்பகுதியில்போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளதுஇந்தியாவின் கிரிக்கெட் வெற்றி. பாகிஸ்தானைத் தோற்கடித்ததும் பட்டாசுகளை வெடித்தும்,இனிப்புகளை வழங்கியும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் பெங்களூரில் கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றி ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.தேவர்ஜீவனஹள்ளி-டேனரி சாலையில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூடி ஊர்வலத்தைத்தொடங்கினர்.
அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஒரு கும்பல் திடீரென்று கல்வீச்சில் ஈடுபட்டது.இதையடுத்து ஊர்வலம் சென்றவர்களும் பதிலடியாகக் கற்களை அந்தக் கும்பல் மீது வீசினர்.
இது பின்னர் வன்முறையாக வெடித்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள இரண்டு கோவில்கள்தாக்கப்பட்டன. ஒரு கும்பல் கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலையைத் தூக்கிக் கொண்டுஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள வேன், ஆட்டோ போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன. அங்கிருந்தமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கடைகள் அடைக்கப்பட்டன. அப்பகுதிமுழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இதையடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று வன்முறையைக்கட்டுப்படுத்த முயன்றனர். கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். ஆனாலும் கூட்டம்கலையவில்லை. போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன.
இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். நிலைமை மேலும் மோசமாகவேதுப்பாக்கிச் சூடும் நடத்தினர். ஆனாலும் யாரும் குண்டுக் காயம் அடையவில்லை. இதையடுத்தேகூட்டம் கலைந்து ஓடியது.
இதையடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வன்முறைக்குக்காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பெரியார் சர்க்கிள் அருகேபோராட்டம் நடத்தப்பட்டது.
அப்போதும் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகளையும் வீசினர்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் பெங்களூரில் கலவரம் வெடித்தது. ஆனால் போலீசார் நிலைமையைஉடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறைச் சம்பவங்களில் நான்கு போலீசார் உள்பட28 பேர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பெங்களூர் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கலவரம்பாதித்த பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டது. இன்று முழுவதும் இந்தப் பகுதிகளில் மயான அமைதி நிலவியது.
இதேபோல் டெல்லி உள்பட நாட்டின் சில பகுதிகளில் கிரிக்கெட் வெற்றி தொடர்பான கலவரங்கள்நேற்று ஏற்பட்டன. குறிப்பாக கடந்த ஆண்டு இன வன்முறையால் பாதிக்கப்பட்ட குஜராத்மாநிலத்தில் நேற்று வன்முறைகள் வெடித்தன. அதில் 19 வயது இளைஞர் ஒருவர் போலீஸ்துப்பாக்க்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
இதையடுத்து நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய அணிக்கு லோக்சபாவில் பாராட்டு:
இதற்கிடையே பாகிஸ்தானைத் தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அணியினருக்கு இன்றுநாடாளுமன்றத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
"இந்திய அணியினர் உலகக் கோப்பையை வென்று வரவும் வாழ்த்துக்கள்" என்று எம்.பிக்கள்சார்பாக மக்களவை சபாநாயகர் மனோகர் ஜோஷி கூறினார்.
இதேபோல் ராஜ்யசபாவிலும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்தெரிவிக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோற்றபோது கடுமையாக விமர்சித்த சிலஎம்.பிக்கள் கூட இன்று இந்திய அணியினரை மனதாரப் பாராட்டினார்கள்.
-->












Click it and Unblock the Notifications