எஸ்.டி.டி. கட்டணம் பாதியாகக் குறைப்பு
டெல்லி:
500 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிகமான எஸ்.டி.டி. தொலைபேசிக் கட்டணம் 47 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இனி எஸ்.டி.டி. கட்டணம் பாதியாகக் குறைந்துவிடும். இதனை மத்திய அரசுக்குச் சொந்தமானபி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்று அறிவித்தது.
500 கி.மீ. தூரத்துக்கு அதிகமான எஸ்.டி.டி. அழைப்புக்கு இதுவரை நிமிடத்துக்கு ரூ. 9.00 வசூலிக்கப்பட்டு வந்தது.இனி நிமிடத்துக்கு ரூ. 4.80 மட்டுமே வசூலிக்கப்படும்.
தனியார் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கட்டணத்தைக் குறைத்து வந்தபோதுபி.எஸ்.என்.எல். மட்டும் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்தது. இதனை அறிவித்த அப்போதையதொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜனுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
தனியார் செல்போன் மற்றும் தொலைபேசி நிறுவனங்களிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களுக்குஉதவுவதற்காகத் தான் அரசுத் தொலைபேசியின் கட்டணத்தை அவர் உயர்த்த முடிவு செய்ததாக செய்திகள்வெளியாயின.
ஆனால், தொலைத் தொடர்புத்துறை சீரமைப்பு வாரியம் (கூகீஅஐ) கொடுத்த பரிந்துரைப்படி தான் கட்டண உயர்வைஅமல்படுத்த முடிவு செய்ததாக மகாஜன் கூறியிருந்தார். இந்தக் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்குவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கட்டணத்தை உயர்த்தினால் பி.எஸ்.என்.எஸ். தொலைபேசி உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்இதனால் நிறுவனத்தையே மூட வேண்டிய நிலை வரும் என்று கூறி தொலைத் தொடர்புத்துறை ஊழியர்களும் நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் தான் சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் மகாஜன் தனது பதவியை இழந்தார்.
இதைத் தொடர்ந்து இப்போது கட்டணத்தை கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப் போவதாக பி.எஸ்.என்.எல்.அறிவித்துள்ள்ளது. இதன்மூலம் மகாஜனுடன் சேர்ந்து கொண்டு கட்டணத்தை உயர்த்துமாறு கூறிய தொலைத்தொடர்புத்துறை சீரமைப்பு வாரியத்தின் பரிந்துரையை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் குப்பையில் தூக்கிஎறிந்துவிட்டது.
கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல். தலைவர் பிரதிபால் சிங் 500 கி.மீ.தூரத்துக்கும் அதிகமான எஸ்.டி.டி. கட்டணத்தை 47 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதனால் இதுவரை நிமிடத்துக்குரூ. 9 கட்டணம் செலுத்திய பொது மக்கள் இனி ரூ. 4.80 மட்டும் செலுத்தினால் போதும்.
அதே நேரத்தில் இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரை கட்டணம் நிமிடத்துக்கு ரூ. 4.50 ஆக இருந்தது. இது ரூ.4.80 ஆக உயர்த்தப்படுகிறது.
500 கி.மீ. தூரத்துக்குள்ளான கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.
ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் நாடு முழுவதும் நிமிடத்துக்கு வெறும் 40 பைசாவில் எஸ்.டி.டி. பேசஅனுமதிக்க உள்ளன. மேலும் பல்வேறு செல்போன் நிறுவனங்களும் இன்-கமிங் கால்களை இலவசமாக்கிவிட்டன.போட்டி கடுமையாகியுள்ளதால் பி.எஸ்.என்.எல். இந்த முடிவை எடுத்துள்ளது.
தனது மொபைல் போன் கட்டணத்தையும் பி.எஸ்.என்.எல். சமீபத்தில் குறைத்தது.
-->












Click it and Unblock the Notifications