பாக். பயங்கராவதம்: அமெரிக்காவுக்கு வாஜ்பாய் சூடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தட்டிக் கேட்க அமெரிக்கா தவறி விட்டதாகபிரதமர் வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில் வாஜ்பாய் இவ்வாறு கூறினார். அவர்கூறுகையில்,

காஷ்மீரில் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய தீவிரவாதத்தைத் தூண்டி வருகிறது.

ஆனால் தீவிரவாதத்தை நசுக்குவதாகக் கூறிக் கொண்டிருக்கும் அமெரிக்கா இதுவரைபாகிஸ்தானைத் தட்டிக் கேட்டதாகவே தெரியவில்லை. இருந்தாலும் இதற்காக எந்த நாட்டையும்இந்தியா வற்புறுத்தப் போவதில்லை.

இந்தியா அணு ஆயுதங்களை வைத்திருந்தாலும் பொறுப்புள்ள நாடு என்பதை உலக நாடுகள்உணர்ந்துள்ளன. அணு ஆயுதங்கள் வைத்துள்ளது குறித்து இந்தியாவை எந்த நாடும் இதுவரைவிமர்சித்தது இல்லை. ஆனால் நம் அண்டை நாடான பாகிஸ்தானை விமர்சித்துள்ளன.

"அனைத்துக்கும் முடிவு சண்டையே" என்று நான் பேசியது உண்மைதான். ஆனால் போர் உதுவும்இல்லாமலேயே அமைதியை ஏற்படுத்த முடியும்.

பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையில் பா.ஜ.க. அரசுநாட்டைத் தூண்டாடிக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இது தவறு.பயங்கரவாதிகளிடமிருந்து இந்தியாவையும் இந்திய மக்களையும் காப்பாற்றுவதற்கானநடவடிக்கைகளைத்தான் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

எதையும் மிகைப்படுத்திப் பேசுவதே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வேலையாகப்போய்விட்டது. அரசியல் நடத்துவதற்கு 100 வழிகள் உள்ளன. ஆனால் அதற்கு மக்கள்தான்சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றார் வாஜ்பாய்.

"அதைத்தான் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பார்த்தோமே" என்று காங்கிரஸ் எம்.பிக்கள்அப்போது மிகவும் நக்கலுடன் சிரித்தனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+