வார இறுதிக்குள் ஈராக் போர் தொடங்கலாம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

இந்த வார இறுதிக்குள்ளேயே ஈராக்கை அமெரிக்கா தாக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்காவின் ஏ.பி.சி. தொலைக்காட்சி நிருபர்களிடம் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் அதிகாரிகள்இதனைத் தெரிவித்தனர்.

ஐ.நா. சபை அனுமதித்தாலும் இல்லாவிட்டாலும், ஈராக் தனது ஏவுகணைகளை அழித்தாலும் அழிக்காவிட்டாலும்இந்தத் தாக்குதல் நடக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை ஐ.நா. ஆயுதக் கண்காணிப்பாளர்கள் குழுத் தலைவர் ஹான்ஸ் பிலிக்ஸ் பாதுகாப்புக்கவுன்சிலில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்வார். அதைத் தொடர்ந்து போர் தொடங்கலாம் என்று தெரிகிறது.

விமானத் தாக்குதல் தொடங்கும் அதே நேரத்தில் துருக்கி எல்லையை ஒட்டிய குர்து இன மக்கள் வசிக்கும்ஈராக்கின் வட பகுதிக்குள் அமெரிக்கா தனது பாராசூட் படை வீரர்களை தரையிறக்கும் என்று தெரிகிறது. இந்தஇன மக்கள் சதாம் ஹூசேனை எதிர்த்து வருகின்றனர். தனி நாடு போல செயல்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் 5 போர்க் கப்பல்கள் மற்றும் 8,000 வீரர்களுடன் கலிபோர்னியாவில் இருந்து இன்னொரு விமானம்தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் இன்று ஈராக் நோக்கி புறப்பட்டது. ஒரு வாரத்தில் இது வளைகுடாவைஅடையும். ஏற்கனவே அங்கு 3 விமானம் தாங்கிக் கப்பல்களும், 30க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களும் தயார்நிலையில் உள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2.25 லட்சம் வீரர்கள் சவுதி, குவைத், துருக்கியில்நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஐ.நா. உத்தரவுப்படி தனது ஏவுகணை அழித்து வரும் ஈராக் தன்னிடம் இருந்த உயிரியல், ரசாயனஆயுதங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அது தொடர்பான முழு விவரத்தை ஐ.நாவிடம் விரைவில்சமர்பிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

ஈராக் இந்த அளவுக்கு ஒத்துழைப்பதால் அந் நாட்டைத் தாக்க உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.ஆனால், அமெரிக்கா தனது பிடிவாத நிலையில் தீவிரமாக உள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவுக்குப் பாடம் புகட்டத் தயாராக உள்ளதாக சதாம் ஹூசேனும் அறிவித்துள்ளார்.நாட்டுக்குள் நுழையும் அமெரிக்கர்கள் பிணமாகவே திரும்புவர் என அவர் எச்சரித்துள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+