நடுக்கடலில் 100 தமிழக மீனவர்கள் கடத்தல்: படகுகள் எரிப்பு- இலங்கை மீனவர்கள் அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற சுமார் 100 தமிழக மீனவர்களை பெட்ரோல்குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றனர்.

அவர்களுடைய படகுகளையும் இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 300 படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 40க்கும் மேற்பட்டபடகுகளில் ஆவேசமாக வந்த இலங்கை மீனவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களைச் சுற்றி வளைத்தனர்.

பின்னர் பெட்ரோல் குண்டுகளால் தமிழக மீனவர்கள் மீது சராமாரியாகத் தாக்குதல் நடத்தினர். நிலைகுலைந்த தமிழக மீனவர்களை வாள்கள், கத்தி, ஈட்டி, வேல், உருட்டுக் கட்டை போன்ற பயங்கரஆயுதங்களால் தாக்கினர்.

இதில் ஏராளமான தமிழக மீனவர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. நடுக்கடலில் நடந்த இந்தபயங்கர தாக்குதலில் தமிழக மீனவர்களின் பல படகுகளும் எரிந்து சாம்பலாயின.

இதையடுத்து தமிழக மீனவர்கள் தப்பிவர முயன்றனர். ஆனால், அந்தப் படகுகளையும் இலங்கைமீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைத்துத் தகர்த்தனர். இதனால் தமிழக மீனவர்கள் கடலில்குதித்தனர்.

அவர்களை அள்ளி தங்கள் படகுகளில் போட்டுக் கொண்ட இலங்கை மீனவர்கள் அவர்களைவாள்களால் தாக்கினர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களை தங்கள் படகுகளில் கட்டிப் போட்டு கடத்திச் சென்றனர்.அவர்களது படகுகளையும் கடத்திச் சென்றனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய சுமார் 200 மீனவர்கள் ரத்தக் காயங்களுடன் ராமேஸ்வரத்துக்குத்திரும்பினர். நடுக்கடலில் தங்கள் சக மீனவர்கள் தாக்கப்பட்ட செய்தி அறிந்ததும் ஆயிரக்கணக்கானமீனவர்கள் ராமேஸ்வரம் கடல் பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம்ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை பேசாலை போலீசாரிடம் அந் நாட்டுமீனவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் அனைவரையும் இலங்கைபோலீசார் கைது செய்துள்ளனர்.

பலத்த காயமடைந்த சுமார் 25 தமிழக மீனவர்கள் பேசாலை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மற்றொரு மீனவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்தலைமன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் போலீஸ் காவலில் இலங்கைசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இலங்கை மீனவர்களின் தாக்குதலில் காயமடைந்து தப்பி வந்த தமிழக மீனவர்கள்ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களில் அருள் மற்றும் ராஜன் ஆகிய இரு மீனவர்களும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை கடற்படையினரும், அந்நாட்டு மீனவர்களும் இதுபோன்ற அடாவடித்தனத்தில் அடிக்கடிஈடுபட்டு தமிழக மீனவர்களைக் கடத்திக் கொண்டு போய் விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள்முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எதிரொலி:

இதற்கிடையே தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு, கடத்தப்பட்ட விஷயம் நாடாளுமன்றத்திலும்எதிரொலித்தது.

ராஜ்யசபாவில் இதுகுறித்துப் பேசிய திமுக எம்.பியான விடுதலை விரும்பி, தமிழக மீனவர்களைஇலங்கை மீனவர்கள் தாக்கி, கடத்துவது இது முதல் முறை அல்ல. மேலும் இதுவரை 100க்கும்அதிகமான தமிழக மீனவர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டும் உள்ளனர். எனவே தற்போதுகடத்தப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அரசு அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது பேசிய அதிமுக எம்.பியான பி.ஜி. நாராயணன், தமிழக அரசு இது தொடர்பாகஉடனடியாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டது என்று கூறினார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானதேசிகன் உள்பட மற்ற எம்.பிக்களும்இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து நிதி அமைச்சரும் இன்று ராஜ்யசபாவுக்குத் தலைமை தாங்குபவருமான ஜஸ்வந்த் சிங்கூறுகையில், தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்.

இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டகச்சத் தீவை நாம் திரும்பவும் பெற வேண்டும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+