வட கொரியா: அமெரிக்க உளவு விமானம் சுற்றி வளைப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

ஜப்பான் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை 4 வடகொரிய போர்விமானங்கள் பின் தொடர்ந்து பறந்து தாக்க முயற்சித்தன. இதையடுத்து அமெரிக்க விமானம்ஜப்பானில் தரை இறங்கியது.

ஈராக் மீது எந்த நேரத்திலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில், வடகொரியாஅமெரிக்காவையே மிரட்டி வருகிறது.

இந்நிலையில் ஜப்பானுக்கு அருகே அமெரிக்காவின் ஆர்.சி.135 ரக உளவு விமானம் ஒன்று கடந்த2ம் தேதி வழக்கமான உளவுப் பணியில் ஈடுபட்டிருந்தது.

ஜப்பான் கடலுக்கு மேல் அது பறந்து கொண்டிருந்தபோது வடகொரியாவைச் சேர்ந்த நான்கு மிக் ரகபோர் விமானங்கள் திடீரென்று அதைப் பின் தொடர ஆரம்பித்தன.

RC - 135சுமார் 20 நிமிடங்களுக்கு அவை அமெரிக்க உளவு விமானத்தைச் சுற்றி வளைத்துமிகவும்நெருக்கமாகப் பறந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒரு விமானம் அமெரிக்க விமானத்தைத்தாக்குவதற்குத் தயாராகவும் இருந்தது.

இதையடுத்து அமெரிக்க உளவு விமானம் ஜப்பானில் உள்ள கதேனா விமானத் தளத்திலேயேமீண்டும் தரை இறங்கி விட்டது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இன்று பிரம்மாண்டமான போர்ப் பயிற்சியைத் தொடங்கஇருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க விமானத்தை வடகொரிய விமானங்கள் தற்போதுமுற்றுகையிட்டுள்ளன. கடந்த 1969ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் ஈ.சி.-121 ரகஉளவு விமானத்தை வட கொரிய விமானம் வழிமறித்து சுட்டு வீ"ழ்த்தியதில் அதிலிருந்த 31அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+