நவீன போர் பயிற்சி விமானம்: இந்தியா தயாரித்தது
பெங்களூர்:
இந்தியா தயாரித்துள்ள போர் பயிற்சி விமானமான ஐ.ஜே.டி. (Intermediate Jet Trainer -IJT) இன்றுவெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது. இதுவரை கிரண் ரக விமானங்களில் தான்இந்திய விமானப் படை விமானிகளுக்கு ஆரம்பகட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து நேரடியாக அதி வேக மிக் ரக விமானங்களில் விமானிகளுக்கு பயிற்சி தரப்பட்டது. கிரண் போன்றமிகச் சிறிய, பழைய விமானங்களில் இருந்து நேரடியாக மிக் விமானங்களில் பயிற்சி தரப்பட்டு வருவதால்பெருமளவில் விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதனால் விமானிகளையும் மிக் ரக விமானங்களையும் நூற்றுக்கணக்கில் இழந்து வருகிறது இந்தியா. இதைத்தவிர்க்க இடைப்பட்ட வேகத்தில் இயங்கும் பயிற்சி விமானங்களை பிரிட்டன் அல்லது செக்கோஸ்லோவாக்கியாஅல்லது ரஷ்யாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மிகப் பழைய கிரண் ரக விமானங்களை ஒழித்துவிட்டு நவீன பயிற்சி விமானங்களில்விமானிகளுக்கு ஆரம்பப் பயிற்சி தரவும் திட்டமிடப்பட்டது. இதற்காகவே இந்த ஐ.ஜே.டி. விமானத் தயாரிப்பில்இந்தியா இறங்கியது.
திட்டமிடப்பட்ட 18 மாதங்களில் விமானத்தைத் தயாரித்து முடித்துவிட்டது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்நிறுவனம். இந்த விமானம் இன்று பறக்கவிடப்பட்டு சோதனையிடப்பட்டது. விமானப் படையைச் சேர்ந்தஸ்குவாட்ரன் லீடர் பல்தேவ் சிங் இன்று முதன்முதலாக இந்த விமானத்தில் விண்ணில் பறந்தார்.
இந்திய விமானப் படைக்கும், கப்பற் படைக்குமாக இந்த ரகத்தைச் சேர்ந்த 200 விமானங்களைத் தயாரிக்கஇந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்பத்துடன் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் போர் விமானத் தொழில்நுட்பங்களும் இந்தவிமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications