ஷாக் அடிக்கப் போகுது!
சென்னை:
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்தாவதோடு, மின் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது.
மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைப்படி இக் கட்டண உயர்வுகள் அமலுக்கு வருகின்றன.இதற்கான அறிவிப்பு வரும் 16ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.
மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பல்வேறு தரப்பினருடன் இந்த ஆணையம் விவாதம் நடத்தி வருகிறது.விவசாய சங்கத்தினருடன் பேசிய இந்த ஆணைய அதிகாரிகள், இலவச மின்சாரம் வழங்குவதால் மாநிலமின்துறைக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மாநில அரசு தயாராக இல்லை என்பதால்இலவச மின்சாரத்தை ரத்து செய்யப் போவதாகவும் கூறியது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மின் கட்டணத்தை உயர்த்தவும் இந்த ஆணையம் முடிவு செய்துள்ளது.இதனை ஆணையத்தின் தலைவர் பால்ராஜ் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் 8,216 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 1 கோடி வீடுகளுக்கு மின் இணைப்புதரப்பட்டுள்ளது. 17 லட்சம் விவசாய பம்ப் செட்களுக்கும், 14 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கும் மின் இணைப்புஉள்ளது.
ஆண்டுதோறும் சராசரியாக 6 லட்சம் புதிய மின் இணைப்புகள் தரப்படுகின்றன. மின் உற்பத்தி செலவு அதிகரித்துவருவதால் கட்டணத்தையும் உயர்த்த வேண்டி உள்ளது என்றார். ஆனால், எவ்வளவு கட்டணம் உயரும் என்றுஅவர் தெரிவிக்கவில்லை.
ஆனால், அதிகாரிகளிடம் விசாரித்ததில் நமக்குக் கிடைத்த தகவலின்படி,
வீடுகளுக்குத் தரப்பட்டுள்ள இணைப்புக்கு இதுவரை 50 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 85 பைசா கட்டணமாகவசூலிக்கப்பட்டு வந்தது. இது இனி யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.10 ஆக உயரலாம் என்று தெரிகிறது.
அதே போல 50 முதல் 100 யூனிட் வரை கட்டணம் ரூ.1.30 ஆகலாம் (தற்போதைய கட்டணம் ரூ. 1.10).
101 முதல் 200 வரை கட்டணம் ரூ.2.60 ஆகலாம் (தற்போதைய கட்டணம் ரூ. 2.00)
201 முதல் 600 வரை கட்டணம் ரூ. ரூ.4.00 ஆக உயரும் (தற்போதைய கட்டணம் ரூ. 3.00)
இதே போல தொழில்துறை, வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டணமும் பல மடங்கு உயர உள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications