அறக்கட்டளை சொத்துக்கள் பிரேமானந்தாவுக்கு சொந்தமானவையே: உயர் நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை:
செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவின் அறக்கட்டளைச் சொத்துக்கள் அவருக்குச் சொந்தமானவையேஎன சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ரவி என்பவரைக் கொலை செய்தது, தனது ஆசிரமத்தில் இருந்த 13 பெண்களைக் கற்பழித்தது ஆகியகுற்றங்கள் காரணமாக கடந்த 1994ம் ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.66.40 லட்சம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.பின்னர் இந்த அபராதத் தொகை ரூ. 61.30 லட்சமாகக் குறைக்கப்பட்டது.
ஆனால், பிரேமானந்தா அபராதத் தொகையைக் கட்டவில்லை. இதையடுத்து அவரது பெயரில்உள்ள பிரேமானந்தா அறக்கட்டளைக்குச் சொந்தமாக, வங்கியில் இருந்த ரூ.36.40 லட்சம் பணத்தைதிருச்சி தாசில்தார் முடக்கினார்.
இதை எதிர்த்து புதுக்கோட்டை துணை நீதிமன்றத்தில் பிரேமானந்தா அறக்கட்டளை வழக்குதொடர்ந்தது. பிரேமானந்தா அறக்கட்டளையில் உள்ள பணம் பிரேமானந்தாவுக்கு சொந்தமானதல்லஎன்று அதில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வழக்கில் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை அணுகியது பிரேமானந்தா அறக்கட்டளை. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்சண்முகம், கற்பகவிநாயகம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தங்கள் தீர்ப்பில்,
கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்ட அடுத்த நாள்தான் பிரேமானந்தாதனது சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் அனைத்தும் அறக்கட்டளைக்குச் சொந்தமானது என்றுஅறிவித்தார். இருப்பினும் இதுவரை இது தொடர்பாக எந்த சட்டப்பூர்வமான மாற்றமும்செய்யப்படவில்லை. சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை பிரேமானந்தா பெயரில்தான்உள்ளது.
எனவே அறக்கட்டளையின் கோரிக்கையை ஏற்க இயலாது. அபராதத் தொக்ைகுத் தேவையானபணத்தை அறக்கட்டளை சொத்திலிருந்து எடுத்துக் கொள்ளத் தடை இல்லை.
பிரேமானந்தாவின் பெயரில் உள்ள சொத்துக்களை அறக்கட்டளைக்கு மாற்ற வேண்டும் என்றகோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சொத்துக்கள் அறக்கட்டளைக்குச் சொந்தமானவை என்று கூறி அபராதத் தொகையை கட்டாமல் தப்பபிரேமானந்தா நினைத்தார். ஆனால், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் பிரேமானந்தாவின்திட்டம் பலிக்கவில்லை.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications